எடப்பாடிக்கு துணிச்சல் வந்துவிட்டதா? – பின்பு பார்த்தால் வேறு கதை!

Share this News:

ஈரோடு (01 பிப் 2023): ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் எடப்ப்பாடி அணியின் சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது பாஜகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் தென்னரசு போட்டியிடுகிறார் என அதிமுக இபிஎஸ் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே இரண்டு முறை ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்திருக்கிறார்.

அதிமுக தேர்தல் பணிமனையில் நடந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் வைக்கப்பட்ட பதாகைகளில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்று இடம்பெற்று இருந்தது. மேலும் பாஜக தலைவர்களின் படங்கள் எதுவும் பதாகைகளில் இடம் பெறாமல் இருந்தது அரசியல் களத்தை பரபரப்பாக்கியது. ஏனெனில் அதிமுக முன்னதாக பாஜக உடன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தது.

இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு பதில் அளிக்காமல் சென்றார். மேலும் அதிமுக சார்பில் வைக்கப்பட்ட இந்த பதாகைகள் காரணமாக பாஜக உடனான கூட்டணியை அதிமுக முறித்துக்கொண்டதோ என்ற கேள்விகள் எழுந்தன. இந்நிலையில் மாலையில் கூட்டணி பெயர் மாற்றம் செய்யப்பட்டு மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி என்றே பதாகைகள் வைக்கப்பட்டன.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *