ஆசிஃபா ஒரு குறியீடு.
பேயாட்டம் போடும்
பிணந்தின்னி
அதிகார வர்க்கத்தின்
ஆணவ(ய)ம்
அறுக்கப்பட்டே ஆக வேண்டும்.
இந்த தேசத்தில்
அவள் ஒரு சிறுபெண்
அவள் ஒரு அப்பாவி
அவள் ஒரு சிறுபான்மை
அவள் ஒரு நிராயுதபாணி
விலங்கினும் கீழான
வன்ம மனிதர்கள்
வாழவும் ஆளவும்
செய்யுமிந்த தேசத்தில்
ஆசிஃபா ஒரு குறியீடு
காலமே…
கைக் கொடு.
ஆசிஃபாவை சிதைத்த
விலங்கினக் கயவர்களை
உன் காலுக்குக் கீழ்
கட்டாந்தரையோடு தேய்த்துப் புதைத்துவிடு.
-இப்னு ஹம்துன்