நமீதாவே தேவலாம் – கொந்தளிக்கும் பாஜகவினர்!

Share this News:

சென்னை (31 மார்ச் 2021): பாஜகவிற்கு ஆதரவாக ராதாரவி பேசுவது பாஜகவுக்கு பெரிய பாதிப்பு என கூறப்படுகிறது.

நேற்று ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளர் குஷ்புக்காக ராதாரவி பேசும்போது, “என் குடும்பமே வில்லன் குடும்பம்.. என் அப்பாவுக்கு 20 பொண்டாட்டிங்க.. ஆனாலும் அவர் யாரையுமே தெருவில் விடவிலை.. இதுவே கமலை எடுத்துக்குங்க.. நம்பி வந்த 3 பொண்ணுங்களையும் காப்பாத்தினாரா? அவர் ஒரு கிறிஸ்தவர்..” என்றும், “கமலிடம் இருப்பது கிறிஸ்துவ பணம்… நீ இதுவரை எத்தனை தயாரிப்பாளர்களை நடக்கவிட்டிருப்பே.. இப்போ கோவையில் தெருதெருவா அலையறே.. திமுகவை பத்தி சொல்லவே வேணாம்.. சுடுகாட்டில் புதைத்த பெண் சடலத்துக்குகூட திமுகவினர் தொல்லை தந்துடுவாங்க..” என்று ராதாரவி பேசியுள்ளார்.

2 நாட்களுக்கு முன்பு புதுச்சேரியில் பேசும்போது, “ஸ்டாலின் பேசும்போது, “நான் ரெடி நீங்க ரெடியா?”ன்னு ஏன் சொல்றார்? அவர் ரெடியாகும் போதுதான் மக்களும் ரெடியாக வேண்டுமா என்ன? சமஸ்கிருதம் என்று அவருக்கு சொல்லவே தெரியவில்லைன்னு சொல்றாங்க. அவருக்கு சமஸ்கிருதம் எப்படி வாயில் வரும்? “சம்சாரம்”ன்னுதானே வரும்? திமுகவினர் ஏமாத்துகாரர்கள்…” என்றார் ராதாரவி.

கடந்த வாரம் கோவையில் இவர் பேசும்போது, “கமல்ஹாசன் இங்கே நிக்கறார்னு தெரியும்.. என்னைவிட கமலை பற்றி யாருக்கும் தெரியாது.. இங்கே அவர் நல்லவன் மாதிரி இருப்பார்.. சாய்பாபா காலனியில் வாடகை கட்டாமல் ஓடின கதை தெரியாதா? அங்கே போய் கேட்டு பாருங்க, கமல் லட்சணம் தெரியும்.. அன்னைக்கு ஆட்டோவில் ஏறினதை பார்த்தேன்.. வாழ்க்கையிலேயே ஆட்டோவில் ஏறினது இல்லை.. முதல்முறையா காசு கொடுத்ததே அந்த ஆட்டோக்காரருக்குதான்.. அந்த காசை கூட வேற பக்கம் பிடுங்கிட்டு இருப்பார்” என்று ராதாரவி பேசினார்.

நமிதா போன்றவர்களை வைத்து பிரச்சாரம் செய்து வரும் பாஜக, பேசுவதற்கு ஆளில்லாமல் ராதாரவியை வைத்து பிரச்சாரம் செய்வது அக்கட்சிக்கு இழப்பையே ஏற்படுத்தும், இதுக்கு நமிதாவே தேவலாம் என்கின்றனர் பாஜகவினர். .


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *