கொரோனாவை பயன்படுத்தி ஏமாற்றி பணம் பிடுங்கும் மருந்துக் கடைக்கு சீல்!

Share this News:

புதுக்கோட்டை (21 மார்ச் 2020): புதுக்கோட்டையில் அதிக விலைக்கு முகக்கவசம் விற்ற மருந்துக் கடைக்கு சீல் வைத்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் புதுகை மாவட்ட அலுவலர்கள் பலரும் கடந்த சில தினங்களாக களப்பணியாற்றி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி, மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் அழ. மீனாட்சிசுந்தரம், நகராட்சி ஆணையர் ஜீவா சுப்பிரமணியன் உள்ளிட்ட குழுவினர் நகரின் பல பகுதிகளில் வெள்ளிக்கிழமை பகலில் வலம் வந்தனர்.

பொதுமக்கள் அதிகம் கூடியிருந்த இடங்களில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர். தெருக்களில் கரோனா விழிப்புணர்வு சுவரொட்டிகளை வீடுகளின் சுவர்களில் ஒட்டினர்.

அப்போது கீழ ராஜவீதியிலுள்ள ஒரு தனியார் மருந்துக் கடையில் நுழைந்த ஆட்சியர் அங்கு விற்கப்படும் முகக்கவசத்தின் விலையைக் கேட்டார்.

அங்குள்ளவர் இயல்பான விலையைவிட கூடுதலாக கூறியுள்ளனர். இதையடுத்து உடனே கடையைப் பூட்டி சீல் வைக்க ஆட்சியர் உமாமகேஸ்வரி உத்தரவிட்டார்.

முகக்கவசம், கைகழுவும் திரவம் போன்றவற்றை அதிக விலை வைத்து விற்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *