விஜய்-யைப் பாதுகாக்கிறதா திமுக?! விஜய் இன்னும் கைது செய்யப் படாதது ஏன்?

விஜய்-யைப் பாதுகாக்கிறதா திமுக?! விஜய் இன்னும் கைது செய்யப் படாதது ஏன்? விஜய்-யைப் பாதுகாக்கிறதா திமுக?! விஜய் இன்னும் கைது செய்யப் படாதது ஏன்?
Share this News:

கரூர் (03 அக் 2025): தவெக தலைவரும் நடிகருமான விஜய்-யின் கரூர் “ரோட் ஷோ” வில் நடந்த மரணங்களுக்கு தவெக தலைவர்களின் பொறுப்பற்ற, முன்னேற்பாடற்ற, தற்குறித்தனமான செயல்பாடுகள்தான் காரணம் என உயர் நீதிமன்றம் கிட்டத்தட்ட உறுதிபடுத்தி விட்டது. கடந்த வாரம் முழுக்க நடந்த தீவிர விசாரணை, வழக்குகளைத் தொடர்ந்து நீதிமன்றம் காட்டமான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை 27 செப் 2025 அன்று, கரூர் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்துகொண்ட “ரோட் ஷோ” பரப்புரையில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். இச் சம்பவம் தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

தமிழ்நாடு அரசு நியமித்த ஒரு நபர் விசாரணை ஆணையத்தைக் கடந்து, உயர் நீதிமன்றமே ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

அதையும் தாண்டி, விஜய்-யின் பிரச்சார வாகன சிசிடிவி வீடியோ பதிவுகளை முழுமையாக ஐஜியிடம் விசாரணைக்காக ஒப்படைக்கவும் உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐஜி அஸ்ரா கார்க் மற்றும் விஜய்
படத்தில்:  ஐஜி அஸ்ரா கார்க் மற்றும் விஜய்

அது மட்டுமில்லாமல்,

விஜய்-யின் வாகனம் இருவரை இடித்து தள்ளிவிட்டு, நிற்காமல் போன கொடூர சம்பவத்தில் உடனே ஹிட் & ரன் வழக்கு பதிவு செய்யவும் கரூர் அசம்பாவித விசயத்தில் விஜய் மீது ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை எனவும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனவும் கடுமையான விமர்சனங்களையும் செய்துள்ளது.

இரையான இந்திய இறையாண்மை!

கூட்டத்துக்குக் கூடும் தம் தொண்டர்களுக்குக் குடிக்கத் தண்ணீர் வசதி கூட முன் ஏற்பாடாக செய்து தராமல், அறிவிப்பு செய்து மக்கள் கூடி இருந்த நேரத்திலிருந்து 7 மணி நேரங்கள் தாமதித்து வந்து மிகப் பெரும் அசம்பாவிதம் ஏற்பட விஜய்தான் முதல் காரணம் என்பதற்கு அனைத்து வீடியோ ஆதாரங்கள் இருந்த போதும் – சம்பவத்துக்குப் பின்னர் இளைஞர்களைத் தூண்டிவிட்டு புரட்சிக் கலவரம் உருவாக்கும் நோக்கில் இந்திய இறையாண்மைக்கும் நாட்டின் நலனுக்கும் எதிராக பதிவிட்ட ஆதவ் அர்ஜூனா மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்வதற்கான எல்லா முகாந்திரங்களும் இருந்த போதும் –  இந்நிமிடம் வரை விஜய் மீது எஃப் ஐ ஆர் கூட பதிவு செய்ய முன்வராததும் ஆதவ் அர்ஜூனா தனி விமானத்தில் டெல்லிக்குத் தப்பிச் செல்ல துணை நின்றதும் தமிழ்நாட்டு அரசு மீது மக்களுக்குப் பெரும் சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

மக்களுக்கும் அரசுக்கும் எதிராக இவ்வளவு வெளிப்படையான சட்ட விரோத விதிமீறல்களைச் செய்தும் தமிழ்நாடு திமுக அரசு விஜய்-யைக் கைது செய்யாமல் விட்டு வைத்திருப்பது ஏன்?

விஜய்-யின் பின்னணியில் இருப்பது திமுகவா? எதிர்வரும் 2026 தேர்தலைக் கணக்கில் வைத்து விஜய்-யைப் பகைத்துக் கொள்ளாமல், பாஜக பக்கம் விஜய் சாய்ந்து விடாமல் இருக்க நிதானமாக திமுக செயல்படுகிறதா?போன்ற பல்வேறு கேள்விகளைப் பொதுமக்கள் கேட்க ஆரம்பித்து விட்டனர்.

நடிகர் விஜய்-யின் அரசியல் பிரவேசமே பாஜக அறிவுசார் நூல்’அகத்தின் வழிகாட்டல்படி தான் எனவும் தமிழ்நாட்டில் எதிர்கட்சி இடத்திலிருக்கும் அதிமுகவை நகர்த்தி அந்த இடத்தை 2026 ல் பிடிப்பதற்கான வியூகங்களில் ஒன்று தான் எனவும் அதிமுக-பாஜக கூட்டணிக்கு எதிரான மனநிலையிலுள்ள ஓட்டுகள் திமுகவுக்குச் செல்லாமல் இருப்பதற்காக துக்ளக் கும்பல் வடிவமைத்த திட்டத்தின் கருவி தான் விஜய் எனவும் ஏற்கெனவே பலத்த சந்தேகம் அரசியல் வட்டாரங்களில் நிலவி வரும் நிலையில், கரூர் அசம்பாவித சம்பவத்தில் திமுக அரசு விஜய் மீதும் தவெக மீதும் நடவடிக்கை எடுக்கப் பெரும் அஸ்திரங்கள் கையில் கிடைத்தும் எந்த அதிவேக நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் சலசலப்புகளையும் உருவாக்கியுள்ளது.

நிஜத்தில் திமுக, தவெக மீது பரிவு காட்டுகிறதா அல்லது விஜய்-யைக் கண்டு பயப்படுகிறதா?

அரசியல் ரீதியாக பார்த்தால், விஜயின் பலமும் பலவீனமும் இரண்டுமே விஜய்-யின் கட்டுப்பாடில்லாத தற்குறி ரசிகக் கூட்டம் தான்.  எதிர்வரும் 2026 தேர்தலில் பெரிய சலனத்தை ஏற்படுத்தி விஜய்க்குக் குறிப்பிடத்தக்க சில சீட்களையாவது வெற்றி பெற்று தந்திருக்க வேண்டிய அந்தப் பொறுப்பற்ற ரசிகர் கூட்டம் தான், அதற்கு முன்னரே விஜய்க்கு மிகப் பெரும் பின்னடைவைத் தற்போது பெற்றுத் தந்துள்ளது.

தற்குறி கூட்டத்தால் மக்களுக்குப் பெரும் இன்னல்கள் ஏற்படும் என்பது உண்மை. ஆனால், அந்தத் தற்குறி கூட்டத்தால் விளையும் பாதகங்கள் மூலம் யாருக்கு நன்மை கிடைக்கும் என்ற கேள்விக்கு, ஒற்றை வார்த்தையில் பாஜகவுக்கு என மக்கள் பதில் சொல்லி விடுகிறார்கள்.

ஆம். முதல் முறை ஓட்டு போடப்போகும் வயதில் பெரும்பாலான வாக்குகள், இந்தத் தற்குறி கூட்டத்திடம் உண்டு. அந்த வாக்குகளும் கட்டுப்பாடற்ற இந்தக் கும்பலும் பாஜகவுக்குப் பயன்படும்.

ஓட்டு அரசியல்: வடக்கு – தெற்கு வித்தியாசம் என்ன?

வடக்கில் இப்படியான ஜோம்பி சங்கி கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளது தான் பாஜகவின் பலம். ஆனால், ஒப்பீட்டில் அறிவுசார் சமுதாயம் என அடையாளம் காணப்படும் தெற்கில் பாஜக-வின் எந்த ஒரு திட்டமும் நடக்காமல் போவதன் காரணம் அப்படியான கட்டுப்பாடற்ற, கும்பல் மனப்பான்மை கலவரக் கூட்டத்தை பாஜகவால் இன்னும் உருவாக்க முடியாதது தான்.

நடிகர் விஜய் நேரடியாக பாஜக பக்கம் சாய்ந்தால், அது விஜய்-யை அரசியல் வாழ்க்கையை அழிக்கும்; பாஜகவுக்குப் பெரிய அறுவடையாக இருக்கும்.

தம் முட்டாள் ரசிகக் கூட்டத்தால் தற்போது சிக்கலில் சிக்கியுள்ள விஜய்-யை முழுமையாக வளைத்து போடத்தான் பாஜக உடனடியாக களத்தில் இறங்கி ஹேமமாலினி தலைமையில் குழுவைத் தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்தது.

டெல்லிக்கு அருகில் உள்ள உ.பி, மணிப்பூர், குஜராத் என கரூரைவிட பெரிய துயரச் சம்பவங்கள் நடந்த பாஜக ஆளும் மாநிலங்களின் பக்கம் தலையே வைக்காத ஒன்றிய பாஜகவுக்கு – தமிழ்நாட்டிற்கான நிதிகளை நீக்கி, தமிழ்நாட்டின் நலன்களுக்கு எதிராக இந்நாள் வரை செயல்படும் பாஜகவுக்கு – இப்போது மட்டும் அக்கறை எப்படி பிய்த்து கொண்டு வந்தது என்ற கேள்விக்கான பதில் தான் விஜயின் தற்குறி ஜோம்பி கூட்டம்.

அதனால்தான், இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசிய தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்க வேண்டிய தேச விரோதி ஆதவ் அர்ஜூனாவுக்கு – ஒன்றிய அரசு தனது கட்டுப்பாட்டிலுள்ள விமான நிலையத்தைத் திறந்து விட்டு எந்த ப்ரோட்டோகாலையும் விதிமுறையையும் பின்பற்றாமல் தனி விமானத்தில் டெல்லிக்குக் கொண்டு சென்று பாதுகாப்பாக வைத்துள்ளது ஒன்றிய பாஜக அரசு.

எனவே, அரசியல் ரீதியாக பார்த்தால் தமிழ்நாட்டைக் கைப்பற்றக் காத்திருக்கும் பாஜகவுக்கு நெருக்கடியில் இருக்கும் விஜய்-யின் ஆதரவு பெரும் சாதகமாக அமையும். அது தமிழ் மண்ணுக்கு மிகப் பெரும் மீண்டுவர இயலா பாதிப்பை ஏற்படுத்தும்.

பணிய வைக்கும் நெருக்கடி சாணக்கியம்

ஒருவருக்கு ஏற்படும் இக்கட்டான சூழலைத் தமக்குச் சாதகமாக பயன்படுத்தி இ.டி,, ஐ ட்டி, சி பி ஐ முதலானவற்றின் மூலம் அவர்களுக்கு நெருக்கடி கொடுத்து பணியச் செய்வது பாஜகவின் பாணி என்பது இந்தியர்களுக்கு நன்கு தெரிந்த விஷயம்.

நடிகர் விஜய்-யும் ஏற்கெனவே அமலாக்கத்துறை மூலம் லாக் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தான், தற்போதைய அசம்பாவிதத்தைத் திமுக சதி என வதந்தி பரப்பி விஜயைத் தூண்டிவிட்டு சிபிஐ-க்குக் கொண்டு செல்ல வைக்க பாஜக முயன்றது. இந்த வியூகம் புரியாமல் தவெகவும் சி பி ஐ விசாரணை கோரி, தற்போது அந்தர்பல்டியத்து அது விபத்து தான் என சொல்லியுள்ளது. இது, திமுக தலைமை நிதானமாக செயல்பட்டதால் விளைந்த நன்மை.

அசம்பாவிதத்துக்கு அவசர கதியில் அரசு இயந்திரத்தை உசுப்பி உதவிகளைச் செய்ய வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், திமுகவின் சதி என தவெக தரப்பும் சேர்ந்து திமுகவுக்கு எதிராக அலறிய போதும், எந்தத் தலைவரும் தம் தொண்டர்கள் சாவதை விரும்பமாட்டார்கள் என அவ்வளவு நிதானமாக, பக்குவமாக அறிக்கை விட்டார். திமுக தரப்பில் இப்போது வரை தவெக-வை நேரடியாக விமர்சிக்கவோ தாக்கவோ செய்யாமல் நிதானமாக செயல்படுவதன் பின்னணி காரணம், தவெக பாஜக சதியில் போய் மொத்தமாக விழுந்து மாட்டிவிடக் கூடாது என்பதால்தான்.

பயிற்றுவிக்கப்படாத, கட்டுப்பாடற்ற வெறியூட்டப்பட்ட ரசிகர்களைக் கொண்ட விஜய் தரப்பால் தமிழ்நாட்டுக்கு நன்மை கிடைக்கவில்லை என்றாலும் தீமையாவது விளையாமல் தடுக்க வேண்டுமெனில் அதற்கு ஒரே வழி விஜய்-யின் வெறி கொண்ட ரசிகர் பட்டாளத்தை அறிவுசார் அரசியல் கல்வி பயிற்றுவிப்பது மட்டும் தான்.

திமுக வகுக்கும் வியூகம்!

இது நடக்க வேண்டுமெனில், பாஜக வியூகத்தில் விழுந்து விஜய் மாட்டிக் கொள்ளக் கூடாது. தமக்கெதிராக தமிழ்நாடு அரசு செயல்படுவதாக விஜய்-யின் மனத்தில் பாஜக-வால் வலிந்து திணிக்கப்படும் எண்ணம் அகற்றப்பட வேண்டியது கட்டாயம். எது நடந்தாலும் அது நீதிமன்ற உத்தரவுகள் மூலம் சட்டப்படியாக நடப்பதே தமிழ்நாட்டு அரசியல் நலனுக்கும் நல்லது.

இந்த எண்ணமே, கரூர் மரணங்களில் இவ்வளவு ஆதாரங்கள் இருந்தும் நேரடி நடவடிக்கைக்குச் செல்லாமல் நிதானமாக தமிழ்நாடு அரசு பயணிப்பதன் காரணம்.

தவெகவின் தற்குறி ரசிகர்களும் தமிழர்கள் தான். தமிழ்நாட்டின் நலனுக்கு கல்வி புகட்டலும், அறிவு சார் பயிற்றுவிப்பு மட்டும் தான் நல்ல பலனை விளைவிக்கும். நமக்கு வடக்கு ஜோம்பி சங்கி கும்பல் தேவையில்லை. தவெக தற்குறி கும்பல் சட்டம் புரிந்து, நிதானத்துக்கு வந்து சரியான அரசியலை முன்னெடுக்கட்டும். அதற்குமாக சேர்த்து தமிழ்நாடு அரசு பணி செய்யட்டும்!

இன்றும் நாளையும் என்றும் நமதே.  தமிழ்நாட்டில் சங்கி ஜோம்பிகளுக்கு இடமே இல்லை!

  • இறைநேசன்

Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *