எச்.ராஜா தோல்விக்கு யார் காரணம்? – உண்மையை போட்டுடைத்த பாஜகவினர்!

Share this News:

காரைக்குடி (05 ஜூலை 2021): கடந்த சட்டமன்ற தேர்தலில் எச்.ராஜாவின் தோல்விக்கு யார் காரணம்? என்பதை போட்டுடைத்துள்ளனர் பாஜக நிர்வாகிகள்.

கடந்த தேர்தலில் எச்.ராஜாவின் படுதோல்விக்கு மாவட்ட பாஜக நிர்வாகிகளே காரணம் என்ற ஒரு புகாரை எச்.ராஜா தெரிவித்தார். இதையடுத்து தேர்தல் செலவுக்காக பாஜக தலைமை கொடுத்த ரூ 13 கோடி நிதியை எச் ராஜா சொந்த செலவுக்கு பயன்படுத்திவிட்டதாக பாஜக தலைமைக்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் புகார் அனுப்பினர்.

இந்த புகார் குறித்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், காரைக்குடி பாஜக மண்டல தலைவர் சந்திரன், சாக்கோட்டை தெற்கு மண்டல தலைவர் பாலமுருகன், கண்ணங்குடி மண்டலத் தலைவர் பிரபு ஆகிய 3 பேரும் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக மாநில பொதுச் செயலாளர் கரு நாகராஜன் அறிவித்தார்.

இதையடுத்து இவர்கள் மூவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில் புகார் தெரிவித்த எங்களிடம் விசாரிக்காமல் எச் ராஜாவிடம் மட்டும் விசாரணை நடத்தப்பட்டது. அவர் நிர்பந்தித்தன் காரணமாகவே எங்களை நீக்கிவிட்டனர்.

தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை செலவு செய்ய அமைக்கப்பட்ட குழுவில் அவரது மருமகனும் ஆர்எஸ்எஸ் நிர்வாகியுமான சூர்ய நாராயணன் மற்றும் அவரது உறவினர்கள் இருந்தனர். எனவே எச் ராஜாவின் தோல்விக்கு அவரது மருமகனே காரணம். பாஜகவில் எச்.ராஜா இருக்கும்வரை தமிழகத்தில் தாமரை மலரவே மலராது என்றனர்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *