ஆதரவு ரஜினிக்கு..! சேர்ந்தது பா.ஜ.க-வில்!.!

Share this News:

சென்னை (25 ஆக 2020): ரஜினி ஆதரவாளரான முன்னாள் கர்நாடக ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை குப்புசாமி, பாஜகவில் இணைந்தார்.

தமிழ்நாட்டின் கரூரில் இருந்து வந்த முன்னாள் கர்நாடக ஐ.பி.எஸ் அதிகாரி, பெங்களூரு தெற்கில் துணை போலீஸ் கமிஷனராகவும், உடுப்பி மற்றும் சிக்மகளூர் மாவட்டங்களில் போலீஸ் சூப்பிரண்டாகவும் பணியாற்றியுள்ளார்.

பல ஆண்டுகளாக காவல்துறை அதிகாரியாக பணியாற்றிய பின்னர், 2019 ல் நெருங்கிய நண்பர் இறந்ததைத் தொடர்ந்து குப்புசாமி தனது வேலையை விட்டு விலகினார். பின்னர் அவர் தனது சொந்த ஊரில் இயற்கை விவசாயம் செய்யத் தொடங்கி, இளைஞர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்புகளைப் பெற உதவும் வகையில் ‘We the Leaders அறக்கட்டளையை’ தொடங்கினார்.

அவர் ரஜினி கட்சி தொடங்கினால் அதில் இணையவுள்ளதாக கடந்த ஒரு மாதம் முன்பு தெரிவித்திருந்தார். தற்போது அவர் பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.முரளிதர் ராவ் மற்றும் தமிழக மாநிலத் தலைவர் எல்.முருகன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *