மருத்துவக் கட்டணம் 1.52 கோடி! தள்ளுபடி செய்து தொழிலாளியை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கிய மருத்துவமனை!

waives Rs 1.52 crore bill Dubai hospital waives Rs 1.52 crore bill
Share this News:

துபை (17 ஜூலை 2020): கொரானோ-வால் இறந்தவர்களின் உடல் உறுப்புக்களைத் திருடிக் கொள்ளும் சம்பவங்கள் நம் நாட்டில் மக்களை துன்ப அதிர்ச்சிக்குள்ளாக்க, துபை-இல் கொரோனா-வுக்கு சிகிச்சை பெற்று வந்த, தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த 42 வயதான கட்டட தொழிலாளி ஒட்னாலா ராஜேஷ் என்பவருடைய சிகிச்சைக் கட்டணம், 1.52 கோடி ரூபாயை தள்ளுபடி செய்து அவரை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றது துபை-இன் மருத்துவமனை ஒன்று!

வளைகுடா தொழிலாளர் பாதுகாப்பு சங்கம், இந்திய துணை தூதரகத்தின் தன்னார்வலரான சுமந்த் ரெட்டி, துணை தூதரக தூதர் ஹர்ஜீத் சிங் ஆகியோருடய கோரிக்கைக்கு செவி சாய்த்த மருத்துவமனை நிர்வாகம், கட்டணத்தை தள்ளுபடி செய்து ராஜேஷை டிஸ்சார்ஜ் செய்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் முதல் 80 நாட்கள் கொரோனா-வுக்கு சிகிச்சை பெற்று வந்த அவருடைய பெருந்தொகை சிகிச்சை கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு, ராஜேஷ் உடைய மனைவி, மகன், மகள் நன்றி தெரிவித்திருக்கின்றனர். பல இன்னல்களை கடந்து அவர் சொந்த ஊர் திரும்ப உதவிய அனைவருக்கும் பலரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, ஒரு ரூபாய் குறைந்தால்கூட விட்டுக் கொடுக்காத இன்றைய கார்பரேட் மருத்துவ உலகில், அதுவும் வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு மனிதாபிமான அடிப்படையில் கோடிக்கணக்கான ரூபாய் கட்டணத்தை தள்ளுபடி செய்த மருத்துவமனைக்கு பாராட்டுக்களும் நன்றிகளும் குவிந்த வண்ணம் உள்ளன.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *