பாலஸ்தீன்-இஸ்ரேல் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

Share this News:

பாலஸ்தீன் (22 நவம்பர் 2023): பாலஸ்தீனப் போராளிகளான ஹமாஸ் இயக்கத்திற்கும், இஸ்ரேலுக்கும் இடையே தற்காலிக போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

கடந்த 50 நாட்களாக காஸா- பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வரும் இஸ்ரேலின் குண்டு மழையை நிறுத்தி பாலஸ்தீனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை தடுக்க தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வரும் கத்தார், இந்த ஒப்பந்தத்தை ஏற்பாடு செய்கிறது.

  • இந்த ஒப்பந்தத்தின்படி, அடுத்த ஐந்து நாட்களுக்கு காஸா பகுதியில் முழுமையாக போர் நிறுத்தப் படுகிறது.
  • தரை வழியாகவோ, வான் வழியாகவோ இஸ்ரேல் போர் தொடுப்பது நிறுத்தப்படுகிறது.
  • காஸாவின் வடக்குப் பகுதியில் மட்டும் தினமும் ஆறு மணி நேரம் போர் நிறுத்தப்படும்.

இரு நாடுகளுக்கான ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொள்ளப் பட்டவை:

“ஹமாஸ் இயக்கத்தினர் பிடித்துச் சென்ற இஸ்ரேலிய பணயக் கைதிகள் 100 பேர் வரை, ஹமாஸ் விடுதலை செய்ய வேண்டும். (இந்நேரம்.காம்)

அதே போல், பல வருடங்களாக இஸ்ரேல் சிறையில் அடைத்து வைக்கப் பட்டிருக்கும் பாலஸ்தீனப் பெண்கள் மற்றும் குழந்தைகள் 300 பேரை இஸ்ரேல் விடுவிக்க வேண்டும்.”

அல்ஜஸீரா தொலைக்காட்சியில் ஹமாஸின் அதிகாரப்பூர்வ செய்தியாளர் இதனை அறிவித்துள்ளார்.

கடந்த அக்டோபர் 07 ஆம் தேதி இஸ்ரேலிய நகரத்துக்குள் பறந்து சென்று, 250 க்கும் மேற்பட்ட நபர்களை பணயக் கைதிகளாக ஹமாஸ் பிடித்துச் சென்றது. இச் சம்பவம் தொடர்பாக இஸ்ரேலிய குடிமக்கள் இஸ்ரேல் அரசுக்குக் கொடுத்து வரும் நெருக்கடியும் போராட்டங்களும் நாளுக்கு நாள் வலுத்து வருகின்றன. இச் சூழ்நிலையில், இஸ்ரேல் பணிந்து வந்திருப்பது குறிப்பிடத் தக்கது. 

-நமது செய்தியாளர் (இந்நேரம்.காம்)


Share this News: