பயங்கரவாத தாக்குதலில் தொடர்பில்லை – 11 வருடங்களுக்குப் பிறகு விடுதலையான அப்பாவி முஹம்மது கவுசர்!

Share this News:

புதுடெல்லி (04 நவ 2019): ராம்பூர் பயங்கரவாத வழக்கில் எந்த வித தொடர்பும் இல்லை என்று முஹம்மது கவுசர் விடுதலை செய்யப் பட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.) முகாம் மீது கடந்த 2008-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி அதிகாலை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 7 வீரர்கள் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய இம்ரான் ஷாசத், முகம்மது பாரூக், சபாவுதீன், முகம்மது ஷெரீப் ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி சஞ்சய் குமார் தீர்ப்பு வழங்கினார். மேலும் ஜாங் பகதூருக்கு ஆயுள் தண்டனையும், பகிம் அன்சாரிக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதிக்கப்பட்டது.

ஆனால் இந்த தாக்குதலில் எந்த தொடபும் இல்லாமல் கைதாகி 11 வருடம் சிறையில் இருந்த முஹம்மது கவுசர் விடுதலை செய்யப் பட்டுள்ளார்.

48 வயது கவுசர் 11 வருடங்களுக்குப் பிறகு விடுதலையான நிலையில் பலமுறை நான் அப்பாவி என்று கூறியும் எனக்கு விடுதலை கிடைக்கவில்லை. எனினும் இப்போதேனும் விடுதலை கிடைத்ததே என்று தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *