மோடியின் தொகுதியான வாரணாசியில் ஏபிவி படுதோல்வி!

Share this News:

வாரணாசி (09 ஜன 2020): வாரணாசியில் உள்ள சம்பூர்ணனந்தா சமஸ்கிருத விஷ்வவைத்யாலயா என்ற பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேர்தலில் இந்திய தேசிய மாணவர் சங்கம் ஏ.பி.வி.பி அணியை தோற்கடித்துள்ளது.

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் விடுதிக் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது கடந்த ஜன.,5ம் தேதி ஏ.பி.வி.பி கும்பல் மாணவர்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்தியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, ஏ.பி.வி.பி அமைப்புக்கு கண்டனம் தெரிவித்தும் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். மேலும், மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், மாணவர்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் தற்போது, வாரணாசியில் உள்ள சம்பூர்ணனந்தா சமஸ்கிருத விஷ்வவைத்யாலயா என்ற பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர்களுக்கான யூனியன் தலைவர், துணைத் தலைவர், பொதுச்செயலாளர் என அனைத்து விதமான பொறுப்புகளுக்கும் நடைபெற்ற இந்தத் தேர்தலில் ஏ.பி.வி.பி, அணி கடும் தோல்வியைத் தழுவியுள்ளது.

ஏபிவிபியின் அடக்குமுறைக்கு கிடைத்த அடியாகவே மாணவர்கள் இந்த தோல்வியை கருதுகின்றனர்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *