தமிழகத்தின் அடுத்த பாஜக தலைவர் இவர்தானம்!

Share this News:

சென்னை (09 ஜன 2020): தமிழக பாஜக தலைவராக அதிக வாய்ப்பு மஹாலக்ஷ்மிக்கே உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக பா.ஜ.க-வுக்கு அடுத்த தலைவராக வர வாய்ப்புள்ளவர் என்று சிலரின் பெயர்களை அவ்வப்போது பா.ஜ.க-விலுள்ள ஒவ்வொரு கோஷ்டியினரும் பரப்பி வருகின்றனர். ஆனால், `அவர்களெல்லாம் கிடையாது. அடுத்து தலைவராகப் போகிறவர் எங்கள் அக்காதான்’ என்கிறார்கள் மஹாலக்ஷ்மியின் ஆதரவாளர்கள்.

“பிரதமர் மோடியின் மாநிலமான குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சௌராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்தவர். பல மொழிகள் தெரியும். இவர் படிக்காத படிப்பே இல்லை, பெயருக்குப் பின்னால் அவ்வளவு பட்டங்கள் உள்ளன. தொழில் நிறுவனம் நடத்துகிறார். ஆயிரக்கணக்கான பெண்களை வைத்து சுய உதவிக்குழுக்களை வெற்றிகரமாக நடத்திவருகிறார். தற்போது மாநில மகளிரணித் தலைவராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இவை போதாதா? என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.


Share this News:

Leave a Reply