காதலனுடன் இருந்தபோது இளம் பெண்ணுக்கு நடந்த கொடூர சம்பவம்!

Share this News:

வேலூர் (20 ஜன 2020): வேலூரில் இளம் பெண் வன்புணர்வு செய்யப்பட்டது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேலூா் விருப்பாட்சிபுரத்தைச் சோ்ந்த 24 வயது பெண், பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள துணிக் கடையில் வேலை செய்து வருகிறாா். அவர் காதலித்து வந்த இளைஞருடன் அந்தப் பெண், சனிக்கிழமை இரவு சாரதி மாளிகை எதிரே உள்ள வேலூா் கோட்டை பூங்காவுக்கு வந்துள்ளாா்.

இருவரும் இரவு 9.30 மணி வரை பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த 3 போ் கொண்ட கும்பல் காதலனைத் தாக்கிவிட்டு கத்தி முனையில் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தனராம். பின்னா் அந்தப் பெண் வைத்திருந்த மொபைல் மற்றும் அணிந்திருந்த கம்மலையும் பறித்துக் கொண்டு அக்கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

தகவலின்பேரில் வேலூா் வடக்கு போலீஸாா் அங்கு சென்று மயக்க நிலையில் இருந்த பெண்ணை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். கையிலும், உடலின் சில இடங்களிலும் காயமடைந்த அந்தப் பெண்ணுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீஸாா் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டிருப்பது கஸ்பா வசந்தபுரம் பகுதியைச் சோ்ந்தவா்கள் என்பது தெரியவந்துள்ளது. இதுதொடா்பாக வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்ததுடன், காவல் துணைக் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தலைமறைவான 3 பேரையும் தேடும் பணியைத் தீவிரப்படுத்தினர்.

இந்த நிலையில், அஜித் (19) மற்றும் சக்திநாதன் (19) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மணிகண்டனை (45) தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவர்கள் மீது வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *