மும்பை (20 ஜன 2020): இந்தியாவில் தொழில் நடத்துவதற்கு அச்சமாக உள்ளது என்று டாட்டா சன்ஸ் நிறுவன தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்தியாவில் ஊழியர்கள் கடுமையாக உழைக்கும் திறன் படைத்தவர்கள் என்றும் அவர்களின் உழைப்பை சரியான திசையில் கொண்டு செல்வதற்கு அரசு முயற்சி மேற்கொள்ளவேண்டும்.இல்லையென்றால் தொழில் கடுமையாக பாதிக்கப்படும். என்று தெரிவித்தார்.
இந்தியாவின் பொருளாதாரம் மந்தநிலையைச் சந்தித்து வரும் நிலையில் மோடி அரசு உரிய ஆலோசனையை பெற்று இந்த மந்தநிலையை சீரமைக்காமல் உள்ளது. பெரும் தொழிலாளிகள் அச்சத்திலேயே உள்ளனர். என்பது டாட்டா சன்ஸ் நிறுவன உரிமையாளரின் பேச்சு உணர்த்துகிறது.