குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் கொந்தளிப்பு!

Share this News:

புதுடெல்லி (28 ஜன 2020): குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பா.ஜ.க. முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு யஷ்வந்த் சின்ஹா, தனது ஆதரவாளர்களுடன் யாத்திரை மேற்கொண்டுள்ளார். கடந்த 9-ம் தேதி, மும்பையில் பயணத்தை தொடங்கிய அவர், ராஜஸ்தான், ஹரியாணா மாநிலங்களைத் தொடர்ந்து, தற்போது உத்தரபிரதேசத்தை வந்தடைந்துள்ளார். .

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில், அம்மாநில முன்னாள் முதலமைச்சர் திரு. அகிலேஷ் யாதவுடன், நிகழ்ச்சியில் பங்கேற்ற திரு. யஷ்வந்த் சின்ஹா, குடியுரிமை திருத்த சட்டம், நம் அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பிற்கு எதிரானது எனத் தெரிவித்தார். மத அடிப்படையில் நாட்டைப் பிரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டினார். மத்தியில் ஒரு சில அரசியல்வாதிகளின் சுயநல செயல்களால், வகுப்புவாத அமைதியை நம்பிய மகாத்மா காந்தி மீண்டும் கொல்லப்படுவதை அனுமதிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.

யஸ்வந்த் சின்ஹாவின் யாத்திரக் காந்தி நினைவு தினமான வரும் 30-ம் தேதி டெல்லி ராஜ்காட்டில் அவரது யாத்திரை நிறைவு பெறுகிறது


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *