மக்களின் போராட்டங்களை சந்திக்க வேண்டி வரும்-பிரதமருக்கு சிவசேனா எச்சரிக்கை

Modi-Shivsena Modi-Shivsena
Share this News:

மும்பை (09 ஆக 2020):உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுத்திய கடுமையான பாதிப்புக்களினால், பல நாடுகளிலும் பாதிப்பு எண்ணிக்கை ஒருபுறம் அதிகரிக்க மறுபுறம் பொருளாதார பாதிப்பு, வேலையின்மை அதிகரிப்பு என மக்கள் பல்வேறு பிரச்னைகளில் சிக்கி தவித்து வருகின்றனர்.

Sanjay Rawath
Sanjay Rawath

குறிப்பாக இந்தியாவில் இந்நிலை மிக தீவிர பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. மக்கள் பலரும் தமது வேலைகளை இழந்து அன்றாட வாழ்க்கையைக்கூட நடத்த முடியாத அளவுக்கு ஒருவேளை சோற்றுக்குக் கூட கஷ்டப்பட்டு வரும் நிலைமைகளும் உருவாகி வருகின்றன. வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், ஊரடங்கால் பாதிக்கப்பட்டு வேலை இழந்த மக்களுக்கான வாழ்வாதாரத்துக்கு அரசு எத்தகைய மாற்று அம்சங்களை எடுத்து வருகின்றது என்று தொடர்ந்து எழுப்பப்பட்டு வரும் கேள்விக்கும் இன்னும் பதில் கிடைத்தபாடில்லை. இந்த நிலையில், இத்தகைய பிரச்னைகள் தொடர்பாக மகாராஷ்டிரா-வின் ஆளும் சிவசேனா கட்சி, தனது முன்னாள் கூட்டாளியான பிரதமர் மோடியைக் கடுமையாக விமர்சித்துள்ளது.

சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கை சாமனா-வில் அக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில் கொரோனா வைரஸ் தொடர்பான நெருக்கடியால் சுமார் 10 கோடி மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். 40 கோடி குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளன. குறிப்பாக, மாத சம்பளத்தை நம்பியிருக்கும் நடுத்தர வர்க்க மக்கள் வேலை இழந்துள்ளனர். தொழில்துறையில் சுமார் ரூபாய் நான்கு லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

மக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. வெறும் நம்பிக்கையுடனும் வாக்குறுதிகளுடனும் அவர்களால் வாழ முடியாது. இராமரின் வனவாசம் கூட முடிந்துவிட்டது. ஆனால், தற்போதைய நிலைமை கடினமாக உள்ளது என்பதை பிரதமர் ஒப்புக்கொள்வார். யாரும் தங்களது வாழ்க்கையை இவ்வளவு பாதுகாப்பற்றதாக உணர்ந்ததில்லை. மக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. வெறும் நம்பிக்கையுடனும் வாக்குறுதிகளுடனும் அவர்களால் வாழ முடியாது’ என்று தெரிவித்துள்ளார்.

Saamana
Saamana

இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக நடக்கும் மக்கள் போராட்டங்களை குறிப்பிட்ட சஞ்சய் ராவத், இந்தியாவிலும் இதேமாதிரியான போராட்டங்கள் நடக்கக்கூடும். வெடிகுண்டு மற்றும் ஏவுகணை ஆகியவற்றை சுமக்கும் திறன் கொண்ட ரஃபேல் விமானங்களால் வேலையின்மை மற்றும் பொருளாதார நெருக்கடியை அழிக்க முடியுமா?’
ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்று வரும் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிகள், ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டுவர வாய்ப்பு, தங்கத்தின் விலை உயர்வு மற்றும் பெருகி வரும் வேலைவாய்ப்பின்மை பற்றி பா.ஜ.க. தலைவர்கள் எவரும் வாய் திறக்காதது ஆகியன குறித்து விமர்சித்திருக்கும் அவர், மக்கள் இந்த நெருக்கடியான சூழலை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது’ என்றும் எச்சரித்துள்ளது மத்திய ஆளும் கட்சியைக் கலக்கமடையச் செய்துள்ளது.

ஏற்கனவே, கடந்த மே மாதம், சஞ்சய் ராவத், ‘குஜராத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்பை வரவேற்கக்கூடிய கூட்டத்தால்தான் கொரோனா வைரஸ் பரவியது என்பதை மறுக்க முடியாது. ட்ரம்புடன் வந்த சில அதிகாரிகள், டெல்லி மற்றும் மும்பை பகுதிகளுக்குச் சென்றனர். இது அங்கும் வைரஸ் பரவ வழிவகுத்தது’ என்று மத்தியில் ஆளும் பா.ஜ.க. மீது காட்டமாக கூறியிருந்தது நினைவிருக்கலாம்.

-இளவேனில்


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *