சட்டமன்ற கதாநாயகன் என்று போற்றப்பட்ட முன்னாள் அமைச்சர் ரஹ்மான்கான் மரணம்!

Share this News:

சென்னை (20 ஆக 2020): சட்டமன்ற கதாநாயகன் என்று போற்றப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் ரஹ்மான்கான் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

கொரோனா தொற்றுக்கு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை ரஹ்மான்கானுக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

ரஹ்மான்கான் திமுக ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் ரகுமான்கான். திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினராகவும் ரகுமான் கான் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஹ்மான்கான் மறைவையொட்டி திமுக சார்பில் துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது. மேலும் மூன்று நாட்களுக்கு திமுக கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *