புதுடெல்லி (19 ஆக 2020): நாடெங்கும் தப்லீக் ஜமாத் மர்கஸ்களில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி, மும்பை, ஐதராபாத்,கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் 20 மர்கஸ்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஐதராபாத் மலப்பள்ளி ஹபீப் நகர் மற்றும் இத்ரே மில்லியா ஆகிய பகுதிகளிலும் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறையினர் சோதனைக்கான காரணத்தை தெரிவிக்க மறுத்துவிட்டனர்.