12 மணிநேரத்தில் 7 பேர் மர்ம மரணம் – விசாரணைக்கு உத்தரவு!

Share this News:

போபால் (15 அக் 2020): மத்தியப் பிரதேசத்தில் கடந்த 12 மணிநேரத்தில் 7 பேர் மர்மமான முறையில் மரணமடைந்தது குறித்து விசாரணை நடத்த முதலமைச்சர் திரு. சிவ்ராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உஜ்ஜைன் நகரில் கடந்த 12 மணி நேரத்தில் 7 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். அவர்களின் மரணத்திற்கான காரணம் தெரியவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்த முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், இந்த மர்ம மரணங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டு உள்ளார். மத்தியப்பிரதேசத்தில் நடைபெற்ற வியாபம் ஊழலில் ஏராளமானோர் மர்மமான முறையில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்‍கது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *