திருவனந்தபுரம்: உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் எஸ்.டி.பி.ஐ தனியாக போட்டியிட்டு 102 இடங்களை கைப்பற்றியுள்ளது.
கேரள உள்ளாட்சித் தேர்தலில் எஸ்.டி.பி.ஐ , 102 இடங்களை கைப்பற்றியுள்ள நிலையில் கடந்த தேர்தலில் 47 இடங்களை மட்டுமே வென்றிருந்தது இது மிகப்பெரிய முன்னேற்றமாகும்.
அதுமட்டுமல்லாமல் 200 க்கும் மேற்பட்ட இடங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் வந்த பல வார்டுகளில், ஒற்றை இலக்க வாக்குகளின் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது.
திருவனந்தபுரம் (10), கொல்லம் (10), பதனம்திட்டா (6), ஆலப்புழா (13), கோட்டயம் (10), இடுகி (1), காசராகோடு (9), கண்ணூர் (13), கோழிக்கோடு (4), மலப்புரம் (9), பாலக்காடு (7), திருச்சூர் (5), எர்ணாகுளம் (5) இடங்களை வென்றனர். கட்சி மாநிலக் குழு சார்பாக, மாநிலத் தலைவர் பி அப்துல் மஜீத் பைஸி, எஸ்.டி.பி.ஐக்கு ஆதரவளித்த வாக்காளர்களுக்கும், வெற்றி பெற்று மக்களின் நம்பிக்கையை வென்ற மக்கள் பிரதிநிதிகளுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
