இந்திய பயணத்திற்கு உலக நாடுகள் தடை!

Share this News:

புதுடெல்லி (20 ஏப் 2021): இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாலும், இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும் பரவி வரும் இரட்டை மரபணு மாற்றமடைந்த கொரோனா, தங்கள் நாட்டில் பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் சில உலக நாடுகள், இந்தியர்கள் தங்கள் நாட்டிற்கு வருவதை தடை செய்துள்ளனர்.

இம்மாத தொடக்கத்தில் நியூசிலாந்து நாடு, இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்குத் தடை விதித்தது. தற்போது ஹாங்காங்கும் இந்திய பயணிகள் விமானத்திற்கு 14 நாட்கள் தடை விதித்துள்ளது. இந்த தடை இன்று (20.04.2021) அமலுக்கு வருகிறது.

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிப்பதன் காரணமாக இந்தியாவில் உள்ளவர்களுக்கு விசா வழங்கும் நடைமுறையை ரஷ்யா தற்காலிகமாக இரத்து செய்துள்ளது. மேலும், இந்தியாவை இங்கிலாந்து தனது ரெட் லிஸ்டில் இணைத்துள்ளது. இதனால் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாடுகளில் வசிக்காதவர்களோ, பிரிட்டிஷ் குடிமக்களாக இல்லாதவர்களோ இந்தியாவில் இருந்து இங்கிலாந்து வர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதாவது அவர்கள் இங்கிலாந்து செல்லும் தேதியிலிருந்து 10 நாட்கள் முன்புவரை இந்தியாவில் இருந்திருக்க கூடாது. இந்தியாவிலிருந்து வேறு நாட்டிற்கு சென்று, அங்கு 10 நாட்கள் இருந்துவிட்டு இங்கிலாந்து செல்லலாம்.

அதேநேரம் இங்கிலாந்து குடிமக்களோ, இங்கிலாந்தில் வசிப்பவர்களோ இந்தியாவில் இருந்து இங்கிலாந்து சென்றால், அவர்கள் 11 இரவுகள் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்படுவார்கள். இந்த விதிமுறை வரும் 23ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வர இருக்கிறது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *