பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தேச துரோக செயல் – ராகுல் காந்தி சாடல்!

Rahul and Modi Rahul and Modi
Share this News:

புதுடெல்லி (28 ஜூலை 2021): பெகாசஸ் தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் தேச துரோக செயல் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் எதிர்க்கட்சிகளின் பெகாசஸ் மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பான அவசர கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி ‘பணவீக்கம், பெகாசஸ் மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகள் உள்ளிட்ட விவகாரங்களில் நாங்கள் சமரசம் செய்துகொள்ள விரும்பவில்லை. நாங்கள் சபையில் விவாதம் நடைபெறுவதை விரும்புகிறோம். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி குரல் நசுக்கப்படுகிறது. ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடக்கிறது. நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கவில்லை.ஒட்டுக்கேட்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. பெகாசஸ் ஒட்டுக்கேட்பு குறித்து விவாதிக்க ஒன்றிய அரசு ஏன் அஞ்சுகிறது.

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் திட்டவட்டமான பதிலை ஒன்றிய அரசு கூற வேண்டும்.ஒட்டுக்கேட்க பெகாசஸ் மென் பொருளை மத்திய அரசு வாங்கியதா ? இல்லையா ?பெகாசஸ் மென்பொருள் மூலம் மத்திய அரசு ஓட்டுக் கேட்டதா ? இல்லையா ?என்பதை விளக்க வேண்டும்.செல்போன் ஒட்டுக்கேட்பு தனிநபர் தொடர்பான பிரச்சனை அல்ல. தேசவிரோத நடவடிக்கையாகும்.அரசே நாட்டு மக்களை உளவு பார்த்ததா என்பதை ஒன்றிய அரசு.தெளிவுப்படுத்த வேண்டும். பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் மவுனம் கலைக்க வேண்டும்.’ என தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்த்தில் சிவசேனா, சிபிஐ, சிபிஎம், ராஷ்டிரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி கட்சி, திமுக, முஸ்லீம் லீக், சமாஜ்வாடி கட்சி மற்றும் கட்சிகளின் கேரள காங்கிரஸ் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த விவாதத்திற்கு மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமை தாங்கினார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *