ஹிஜாபுக்காக எங்கள் போராட்டம் தொடரும் – சிங்கப்பெண் முஸ்கான் பேட்டி!

Share this News:

மாண்டியா (08 பிப் 2022): ஹிஜாபுக்காக எங்கள் போராட்டம் தொடரும் என்று கர்நாடக மாணவி முஸ்கான் தெரிவித்துள்ளார்.

முஸ்கான் என்ற மாணவி இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார். அதற்குக் காரணம் காவி சால்வை அணிந்து கும்பலாக வந்த இந்துத்வா மாணவர்கள் நூற்றுக்கணக்காணோர், தனியொருத்தியாக வந்த மாணவிமுன்பு ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கோஷமிட்டபடி அந்த மாணவியை இடைமறித்தனர். ஆனால் எதற்கும் அஞ்சாத அந்த மாணவி ‘அல்லாஹு அக்பர்’ என்று கைகளை உயர்த்தி கோஷமிட்டபடி வகுப்பறைக்கு நகர்ந்தார். இந்த வீடியோதான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் அம்மாணவி முஸ்கான், என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் விவரிக்கும்போது, “நான் கவலைப்படவில்லை. எனது அசைன்மென்ட்டை ஒப்படைக்கவே கல்லூரிக்கு வந்தேன்.புர்கா அணிந்ததால் என்னை அவர்கள் அனுமதிக்கவில்லை. என்னை நோக்கி ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் எழுப்பினர். அதனைத் தொடர்ந்தே நான் அல்லாஹு அக்பர் கூற ஆரம்பித்தேன்.

எனது இந்து நண்பர்கள் எனக்கு துணையாக இருந்தனர். காவித் துண்டு அணிந்திருந்தவர்கள் வெளியிலிருந்து வந்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். நான் தொடர்ந்து ஹிஜாப் அணிவேன். இதற்கான போராட்டம் தொடரும். ஆடைக்காக அவர்கள் கல்வியை அழிக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *