இரண்டாவது திருமணம் – மனம் திறந்த நடிகை மீனா!

Share this News:

சென்னை (04 டிச 2022): இரண்டாவது திருமணம் குறித்து பரவும் தகவலுக்கு நடிகை மீனா பதிலளித்துள்ளார்.

90களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த மீனா இப்போதும் தனக்கான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்த வருடம் மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

மீனாவின் கணவரின் இறப்பை குறித்தே பல வதந்திகளும் சேர்ந்தே சமூகவலைத்தளங்களை ஆக்கிரமிக்க, இவ்வாறான செய்திகளை பரப்ப வேண்டாம் என கவலையுடன் கேட்டுக்கொண்டார் மீனா. இந்நிலையில், மீனா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள போவதாக அண்மையில் பரவலாக பேசபட்டது.

இது குறித்து பேசியுள்ள மீனா, தன் கணவர் இறந்த துக்கத்தில் இருந்தே தான் இன்னும் மீளவில்லை என கூறியுள்ளார். மேலும், அதற்குள்ளாக இப்படியா பேசுவது என ஆதங்கப்பட்டுள்ள மீனா, தற்சமயத்துக்கு கதைகளை தேர்வு செய்வதில் மட்டுமே தான் கவனம் செலுத்தி வருவதாக பகிர்ந்துள்ளார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *