கோவை ஈஷா மையத்திற்கு சென்ற மனைவியை காணவில்லை – கணவன் புகார்!

Share this News:

கோவை (20 டிச 2022): கோவை ஈஷா மையத்திற்கு சென்ற மனைவியைக் காணவில்லை என்று கணவர் புகார் அளித்துள்ளார்.

கோயம்­புத்தூர் – செம்­மேடு, வெள்­ளி­யங்­கிரி மலை அடி­வா­ரத்தில் ஈஷா யோகா மையம் உள்­ளது. 150 ஏக்கர் நிலப்­ப­ரப்பில் விரிந்­துள்ள இந்த மைய­மா­னது, உள்­நிலை மாற்­றத்­திற்­கான சக்தி வாய்ந்த இடம் என்று பிரச்சாரம் செய்யப் ­ப­டு­கி­றது.

இங்கு தியா­ன­லிங்கத் திருக்­கோவில், ஸ்பந்தா ஹால், ஈஷா புத்­து­ணர்வு மையம், ஈஷா இல்லப் பள்ளி மற்றும் ஈஷா குடி­யி­ருப்­புக்கள் உள்­ளன. ஈஷா அறக்­கட்­ட­ளையை நிறுவி, தொண்டு நிறு­வ­னத்தை சத்­குரு ஜக்கி வாசுதேவ் நடத்தி வருகிறார்.

ஆனால், இந்த யோகா மையம் துவங்கிய நாளில் இருந்தே இதன் நிர்வாகத்தின்மீது பல்வேறு புகார்களும், சர்ச்சைகளும் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன. மர்மமான முறையில் அவ்வப்போது பலர் காணாமல் போவது இங்கே அடிக்கடி நடக்கிறது என்றும், காவல்துறையினர் இவற்றைக் கண்டுகொள்வதில்லை என்பதும் இந்த மையத்தைச் சுற்றியுள்ள வட்டார மக்களின் புலம்பலாகும்.

இந்நிலையில் இங்கு சென்ற வாரம் யோகா பயிற்சிக்கு சென்ற மனைவி சுபஸ்ரீயை காணவில்லை என்பதாக பழனிகுமார் என்பவர் ஆலந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நேற்றே பயிற்சி முடிந்துள்ள நிலையில் இதுவரை மனைவி வீடு திரும்பவில்லை என கணவர் புகார் அளித்துள்ளார்.

ஆனால் பயிற்சி முடிந்து சுபஸ்ரீ யோகா மையத்தை விட்டு வெளியேறிவிட்டதாக யோகா மையம் விளக்கம் அளித்துள்ளது.

புகாரைப் பெற்றுக் கொண்ட காவல்துறை, இம்முறை அசைந்து கொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *