ரியாத் (20 டிச 2022): சவுதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வெள்ளிக்கிழமை வரை மழை தொடர வாய்ப்புள்ளது. சவுதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் பருவநிலை மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கனமழையுடன் இடியுடன் கூடிய மழை, புழுதி காற்று மற்றும் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மக்கா, அல்பாஹா, அல் மதீனா, ஹைல், அல் காசிம், ரியாத் மற்றும் ஆசிர் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை மாலை முதல் வியாழன் காலை வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் மையம் எச்சரித்துள்ளது.