GCC நாடுகளில் பணிபுரிபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

Share this News:

குவைத் (10 ஆகஸ்ட் 2025):  வளைகுடா (GCC) நாடுகளில் பணிபுரியும் வெளிநாட்டவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. குவைத் நாட்டிற்குச் செல்ல இனி தனியே விசா எடுக்கத் தேவையில்லை.  “ஆன் அரைவல்” விசா மூலம் இனி எவரும் குவைத்திற்கு எளிதாகச் செல்லலாம். சுற்றுலா செல்வோரும் இந்த விசாவை பயன்படுத்திக் கொள்ளலாம் என குவைத் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனை, குவைத் நாட்டின் முதல் துணைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரான ஷேக் ஃபஹத் யூசுப் சவுத் அல்-சபாஹ் அறிவித்துள்ளார்.

குவைத் நாடு கொண்டு வந்துள்ள இத்தீர்மானத்தின் மூலம்,  கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், ஓமான், சவூதி, பஹ்ரைன் ஆகிய GCC நாடுகளில் ஏதேனும் ஒன்றில் பணி நிமித்தம் வசித்து, குடியிருப்பு அடையாள அட்டை (Resident Permit) வைத்துள்ள வெளிநாட்டு நாட்டு குடிமக்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் எவரும், குவைத் நாட்டிற்குள் சுற்றுலா நோக்கில் நுழைய அனுமதிக்கப்படுவர்.

“ஆன் அரைவல்” விசா பெறுவதற்கு, விண்ணப்பதாரரின் GCC குடியிருப்பு அடையாள அட்டை (Resident Permit)  அனுமதி குறைந்தது ஆறு மாதங்கள் செல்லுபடியாக இருக்க வேண்டும். இந்நேரம்.காம்

வான், தரை, கடல் மார்க்கமாக வருகை தரும் பயணிகள், நுழைவு துறையில் (Port of Entry) நேரடியாக சுற்றுலா விசாவைப் பெறுவார்கள்.  முன்கூட்டியே விசா எடுத்துவிட்டு பயணம் செல்ல வேண்டிய அவசியம் இனி இல்லை.

இன்றுமுதல் உடனடி அமலுக்கு வரும் இந்த நடவடிக்கை, GCC நாடுகளுக்கான சுற்றுலா நுழைவுக்கு அமல்படுத்தப்பட்ட 2008 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட  விதிமுறைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கப் படுவதாகும்.

வளைகுடா-வின் ஆறு நாடுகளை ஒன்றிணைக்கும் அதிவேக ரயில்வே திட்டமான கல்ஃப் ரயில்வே (Gulf Railway) , இறுதிக் கட்டத்தை எட்டும் வேளையில் வளைகுடா நாடுகள், நிபந்தனைகளை தளர்த்தி விசாவை எளிதாக்கி வருவது குறிப்பிடத் தக்கது.

வளைகுடா நாடுகளை ஒன்றிணைக்கும் திட்டத்தை முழுமையாக அறிய, இந்நேரம்.காம் தளத்தின் கீழ்க்கண்ட செய்திகளைப் பார்வையிடுக:

பிரமிக்க வைக்கும் கல்ஃப் ரயில்வே – முழுமையான தகவல்கள்!

கத்தார்-பஹ்ரைன் இணைக்கும் பாலம் கட்டும் பணி துவக்கம்!

ஒரே விசாவில் இனி ஒட்டு மொத்த வளைகுடா பயணிக்கலாம்!


Share this News:

One thought on “GCC நாடுகளில் பணிபுரிபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

Comments are closed.