இந்நேரம்

ஐஃபோன் 17 ஏன் வாங்கக் கூடாது? 5 காரணங்கள் இங்கே!

துபாய் (09 செப் 2025): ஆப்பிள் தனது புதிய ஐஃபோன் 17 தயாரிப்புகளை வெளியிடும் சூழலில், புதிதாக ஐபோன் 17 ப்ரோ மாடல்கள் வாங்க எண்ணும் ஐஃபோன் ரசிகர்கள், சற்று நிதானிக்குமாறு பரிந்துரை செய்யப்படுகிறது. அதற்குக் காரணம், தற்போது வெளியாகும் 17 மாடல்களில் உருவத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் இருப்பதும், அதற்கு அடுத்த 2026 ஆம் ஆண்டில் வெளியாக இருக்கும் ஐபோன் 18 மாடல்களில் மிகப் பெரிய மாற்றங்களுடன் வெளியாக இருப்பதும் காரணம். 2026 ஆம் ஆண்டில்…

மேலும்...

வளைகுடா நாடுகளுக்கு வருகிறது புதிய போக்குவரத்து சட்டம்!

குவைத் (31 ஆகஸ்ட் 2025): வளைகுடா (GCC) நாடுகளில் வாகனங்களில் பயணம் செய்வோருக்கான போக்குவரத்து விதிமுறை மீறல்களை ஒருங்கிணைக்கும் திட்டம் 95% நிறைவடைந்துள்ளது. இதற்கான புதிய போக்குவரத்து சட்டம் பற்றி GCC பொதுச் செயலாளர் ஜாஸிம் முகம்மது அல்-புதைவி அறிவித்துள்ளார். சமீபத்தில் குவைத் நாளிதழான அல் கபாஸ்க்கு இவர் அளித்த நேர்காணலில், இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தவுடன் GCC நாடுகளுக்கு இடையே நிகழும் போக்குவரத்து விதிமுறை மீறல்கள் உடனடியாக தவறிழைத்தவருக்கு தெரிவிக்கப்படும் என்று கூறியுள்ளார். (இந்நேரம்.காம்) இதுநாள்…

மேலும்...

‘மௌனத்தின் பாடல்’ – கவிதை நூல் விமர்சனம்!

இதயமெல்லாம் இனிக்கும் இளம்கவிஞர் இப்னு ஹம்தூனின் மானுடம் பாடும் ‘மௌனத்தின் பாடல்’ பற்றிய விமர்சனம். இரத்தினச் சுருக்கமான இலக்கிய வடிவம் கவிதை. சங்ககாலம் முதல் சமகாலம் வரை உள்ள கவிதைகளில் இன்றைய கவிதைகள் உணர்ச்சியிலும் உள்ளடக்கத்திலும் புதியதொரு உருமாற்றம் பெற்றுள்ளன. கவித்திறனும் கருத்தாழமும் மிக்க கவிதைகள் மனித நேயம் – மானுட மகிழ்ச்சி – மக்கள் சுதந்திரம் – மனித எழுச்சி என்கிற மனிதமேம்பாட்டால் தமிழுக்கும் வாழ்வுக்கும் புது முகம் தந்துள்ளன. சமகால அழுக்கை – சமூக…

மேலும்...
தீப்பிடித்து எரிந்த லாரியை அகற்றியவருக்கு ரூ. 22.3 கோடி ரூபாய் பரிசு!

தீப்பிடித்து எரிந்த லாரியை அகற்றியவருக்கு ரூ. 22.3 கோடி ரூபாய் பரிசு!

ரியாத் (22 ஆகஸ்ட் 2025):  பெட்ரோல் ஸ்டேஷனில் தீப்பிடித்து எரிந்த லாரி-யைத் துணிச்சலுடன் அகற்றி, மிகப் பெரும் விபத்தைத் தவிர்த்தவரைப் பாராட்டி, சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் ரூ. 22.3 கோடி ரூபாய் மதிப்பிலான தொகையை பரிசாக அளித்துள்ளார். ரியாதிலிருந்து சுமார் 300 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கிராமம் அல்-சாலிஹியா (Al-Salihiya). கடந்த வெள்ளிக்கிழமை (15 ஆகஸ்ட் 2025) அன்று அல் சாலிஹியா பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் ஸ்டேஷனில், மாடுகளுக்கான தீவனம் ஏற்றிச் சென்ற லாரி…

மேலும்...

ரூ. 220 கோடி மதிப்புள்ள வைரத்தைத் திருடியவர்கள் துபாயில் சிக்கியது எப்படி?

துபாய் (18 ஆகஸ்ட், 2025) :  ரூபாய் 220 கோடி மதிப்பிலான (25 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள) அரிய  இளஞ்சிவப்பு வைரத்தைத் திருடியவர்கள், சில மணி நேரங்களிலேயே துபாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். “மிகவும் அரிய இளஞ்சிவப்பு வைரத்தை திருடிய மூவரை துபாய் காவல் துறை கைது செய்துள்ளது. திருடர்களிடம் இருந்து மீட்கப்பட்ட இந்த வைரத்தின் இன்றைய மதிப்பு 25 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்,” என ஐக்கிய அரபு எமிரேட்ஸ் காவல்துறை தனது அதிகாரப்பூர்வ…

மேலும்...

GCC நாடுகளில் பணிபுரிபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

குவைத் (10 ஆகஸ்ட் 2025):  வளைகுடா (GCC) நாடுகளில் பணிபுரியும் வெளிநாட்டவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. குவைத் நாட்டிற்குச் செல்ல இனி தனியே விசா எடுக்கத் தேவையில்லை.  “ஆன் அரைவல்” விசா மூலம் இனி எவரும் குவைத்திற்கு எளிதாகச் செல்லலாம். சுற்றுலா செல்வோரும் இந்த விசாவை பயன்படுத்திக் கொள்ளலாம் என குவைத் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனை, குவைத் நாட்டின் முதல் துணைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரான ஷேக் ஃபஹத் யூசுப் சவுத் அல்-சபாஹ் அறிவித்துள்ளார். குவைத் நாடு…

மேலும்...

பயங்கர ஆயுதங்களைக் கடத்த முயன்ற ஐந்து பேர் கத்தாரில் கைது!

தோஹா, கத்தார் (09 ஆகஸ்ட் 2025) :  கத்தார் நாட்டிற்குள் AK-47 உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைக் கடத்த முயன்ற ஐந்து பேர் கத்தாரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கத்தார் நாட்டின் உள்துறை அமைச்சின் குற்றப்புலனாய்வு துறை இவர்களைக் கைது செய்துள்ளது. இவர்கள் கத்தார் நாட்டுக்குள் ஏற்கனவே துப்பாக்கிகளை கடத்தி வந்ததும் சட்டவிரோதமாக விற்பனை செய்வதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.  கத்தாரில் கைது செய்யப்பட்ட மூவர் வெளிநாட்டினர் மற்றும் இரு நபர்கள் கத்தார் நாட்டு குடிமக்களாவர். (inneram.com) துப்பாக்கிகளை சிலர்…

மேலும்...

புகைப்படத்தைப் பரப்பினால், ஒரு லட்சம் ரியால் அபராதம்!

தோஹா (05 ஆகஸ்ட் 2025):  முன் அனுமதி பெறாமல் ஒருவரின் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை இணையத்தில் பரப்பினால், ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது 100,000 கத்தார் ரியால் அபராதம் (இந்திய ரூபாய் மதிப்பில் 23.5 லட்சம்) விதிக்கப்படும் என கத்தார் நாடு அறிவித்துள்ளது. இதற்குரிய சட்டத் திருத்தங்களை இன்று கத்தார் அரசு வெளியிட்டுள்ளது. மேலும் இது சைபர் குற்றமாகக் கருதப்படும் என்றும் அறிவித்துள்ளது. கத்தார் நாட்டில் வசிக்கும் மக்கள் மற்றும் வருகை தரும் சுற்றுலா பயணிகள், நகரின் பொது…

மேலும்...

உலகின் 3 பாதுகாப்பான நாடுகள் எவை தெரியுமா?

குறைவான குற்றங்கள் மற்றும் அதிக பாதுகாப்புத் தரநிலைகளைக் கொண்ட உலகின் மிகப் பாதுகாப்பான நாடுகளின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. ஒரு நாட்டில் நடைபெறும் குற்ற குறியீடுகள், பாதுகாப்பு குறியீடுகள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு அந்த நாட்டின் குற்றச்செயல்களின் அளவைக் கணிப்பதில் Numbeo நிறுவனம் புகழ் பெற்றது. Numbeo நிறுவனம் 2025 ஆம் ஆண்டு இடைவருட பாதுகாப்பான நாடுகளின் பட்டியல் ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது. இதில் இடம் பெற்ற 148 நாடுகளில், கத்தார் 84.6 என்ற பாதுகாப்பு மதிப்பெணுடன்…

மேலும்...
சவூதியில் உம்ரா விசா மீண்டும் தொடக்கம்!

சவூதியில் உம்ரா விசா மீண்டும் தொடக்கம்!

இன்று ஜூன் 10 முதல் உம்ரா விசா வழங்குவதை மீண்டும் தொடங்குகிறது சவூதி அரேபியா.  உம்ரா பயணம் மேற்கொள்ளவிருக்கும் பயணிகள் தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன? ஹஜ் யாத்திரிகர்களுக்கு சிறந்த வசதிகளையும் பாதுகாப்பையும் வழங்கும் நோக்கில் ஹஜ் பருவத்திற்கு முன்னதாக உம்ரா விசா தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. ஹஜ் 2025 பருவம் முடிவுக்கு வந்ததை அடுத்து, 2025 ஜூன் 10 முதல் உம்ரா விசா வழங்குவதாக சவூதி அரேபியா அறிவித்துள்ளது.  மகிழ்ச்சியான இச் செய்தியை வளைகுடா நாடுகள் உட்பட உலகமெங்கிலும்…

மேலும்...