(தமிழக) அரசின் கையாலாகாத்தனம் – நீதிமன்றம் செருப்படி!

ஒலிம்பிக் போட்டில் ஒரு தங்கம் வென்று வந்ததை ஒட்டுமொத்த நாடும் கொண்டாடி கொண்டிருக்கும் வேளையில், தேசிய அளவில் பல தங்கப் பதக்கங்களை வென்ற சிறுமி ஒருவரைக் காது கேளாருக்கான ஒலிம்பிக் போட்டியில் பங்குபெற அனுப்பாத அரசுகளுக்கு நீதிமன்றம் செருப்படி கொடுத்து உத்தரவிட்டுள்ளது, அரசுகளின் கையாலாகாத்தனத்தை வெட்ட வெளிச்சமிட்டு காட்டியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், கடையாலுமூடு கிராமத்தைச் சேர்ந்தவர் சிறுமி சமீஹா பர்வீன். இவர் தம் 6 ஆம் வயதில், தவறானதொரு அறுவை சிகிட்சையால் காது கேட்கும் திறனை இழந்ததோடு…

மேலும்...

போலி அறிவியல், மாற்று மருத்துவம், மூட நம்பிக்கை!

தமிழ் கூறும் நல்லுலகில் அலோபதியை விமர்சித்து ஏராளமான நூல்கள் வந்துள்ளன. அந்த அலைக்கு மாற்றாக மாற்று மருத்துவத்தை விமர்சனம் செய்த ஆங்கில் மருத்துவ நூல் எனும் வகையில் இந்த நூல் தனி கவனம் பெற்றுள்ளது. அதனால் தானோ என்னமோ அமேசான் கிண்டிலில் விற்பனையில் முதலிடத்தையும் பிடித்துள்ளது. பிற மருத்துவ முறைகளை போலி அறிவியல் என்றும் ஆங்கில மருத்துவம் என அழைக்கப்படுவது விஞ்ஞான மருத்துவம் எனவும் குறிப்பிடும் ஆசிரியர் தொற்று நோய்கள், பரவாத நோய்கள், இயற்கை, செயற்கை, எது…

மேலும்...

பிரிவினையின் வலி மிகுந்த இரயில் பயணம்!

இந்தியாவின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக கருதப்படும் மறைந்த குஷ்வந்த சிங்-ன் புகழ் பெற்ற நூலான Train To Pakistan-ஐ படித்த போது அவர் ஏன் அவ்வாறு கருதப்படுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. வரலாற்றை வெறுமனே தரவுகளோடும் தகவல்களோடும் சொல்வது ஒரு வகை எனில் அதை இன்னும் ஆழமாக மனிதர்களின் பார்வையில் சமூகவியல் கண்ணோட்டத்துடன் சொல்லும் போது, அது வெற்று வரலாறாக இல்லாமல் நம்மைத் தனிப்பட்ட முறையில் வரலாற்றோடு இணைத்துவிடுவதாக ஆகிவிடுகிறது. அந்த ரசவாதத்தைத் தான் குஷ்வந்த்…

மேலும்...

முகத்தில் அறையும் உண்மை – புத்தக திறனாய்வு!

Mothering a Muslim – Nasia Erum ’ஒரு முஸ்லீமின் தாயாக இருத்தல்” எனும் பொருள்படும் நஸியா எருமின் இப்புத்தகம், அவர் 2014ல் தாயான போது ஏற்பட்ட அச்சத்தை கருவாக கொண்ட நூலாகும். இன்றைய சூழலில் அதிகம் பேசப்படாதொரு விசயத்தைக் கையிலெடுத்து மிகுந்த கவனத்துடன் கையாண்டுள்ளார் நஸியா. இந்தியாவில் ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டுள்ள அடிப்படைவாத முஸ்லீமாக இல்லாமல் மைய நீரோட்டத்தில், பொதுவான சூழலில் தன் குழந்தை வளர வேண்டும் என்று நினைக்கும் சமூகத்தின் மேலடுக்கில் உள்ள முஸ்லீமான நஸியா…

மேலும்...

கருணா நிதி : படிக்க வேண்டிய வரலாறு!

Karunanidhi : The Definitive Biography by Vasanthi ( India Today Former Tamil Editor) கருணாநிதி.. இந்தப் பெயர் சிலருக்குப் பிடிக்கலாம், சிலருக்கு வெறுப்பைத் தரலாம். ஆனால் தமிழக அரசியல் வரலாற்றில் அவர் ஒதுக்கப்பட முடியா நபர் என்பதை அனைவரும் ஒத்துக் கொள்வோம். அப்படிப்பட்ட ஒருவரின் வாழ்வை எந்தப் பக்கசார்புமின்றி எழுதுவது கடினம். இந்தியா டுடே தமிழ் முன்னாள் ஆசிரியரும் கலைஞரை அதிகம் விமர்சித்தவருமான வாசந்தி நடு நிலையாக இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். 20…

மேலும்...
பூமி சினிமா விமர்சனம்

பூமி – வாட்ஸ் அப் காமடி!

வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் பரப்பப்படும் கதைகளும் காமடிகளும் வெள்ளித்திரையில் உங்களை மகிழ்விக்க வந்தால் எப்படியிருக்கும்? அப்படியான ஒன்றைப் பார்க்க விரும்பினால் சமீபத்தில் வெளியான பூமி திரைப்படத்தைப் பாருங்கள். 13 குடும்பம், கார்ப்பரேட், ஃப்ரீ மேசன், இலுமினாட்டிகள், நான் தமிழன்டா, இயற்கை விதை, மரபணுமாற்ற விதைகள், நாசா, செவ்வாய் கிரகம், விஞ்ஞானி, நாலு ஃபைட், நாலு பாட்டு, ஏலியன்களை மிஞ்சிய நாயகன், இறுதியாக ஒரு வந்தே மாதரம். இவற்றைக் குழைத்து நாலு வரியில் நாயகன்…

மேலும்...

சவூதியில் திருமண மண்டபம், ஓட்டல்கள், அரங்கங்களில் நிகழ்ச்சிகள் நடத்த தற்காலிக தடை!

ரியாத் (13 மார்ச் 2020): கொரோனா வைரஸ் எதிரொலியாக சவூதியில் திருமண மண்டபம், ஓட்டல்கள், அரங்கங்களில் நிகழ்ச்சிகள் நடத்த தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகமெங்கும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. சீனாவை அடுத்து இத்தாலி, மற்றும் வளைகுடா நாடான ஈரான் ஆகிய நாடுகளில் அதிக அளவில் கொரோனா வைரஸால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அனைத்து நாடுகளும் கொரோனா மேலும் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில், சவூதி அரேபியாவில்…

மேலும்...

தம்பி – சினிமா விமர்சனம்!

பாபநாசம் படத்தின் மூலம் பலரை திரும்பிப் பார்க்க வைத்த ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தம்பி.

மேலும்...