தேர் வராது என்றவர்கள்
தேர்தல் வருகிறது என்றதும்
சேரிக்குள் நடந்து வந்து
செல்லங் கொஞ்சுகிறீர்கள்!
நீர்பிடிக்கவும், பிணம் அடக்கவும்
வேறிடம் உனக்கு என்றவர்கள்
ஓட்டுப் போட மட்டும்
வா என்னோடு என்கிறீர்கள்.
செருப்பணிந்து நடக்காதே
என்று உத்தரவிட்டவர்கள்
செருப்பாய்த் தேய்வேன் என்று
சத்தியம் செய்கிறீர்கள்.
பக்கம் பக்கம் நின்று
படமெடுத்துக் கொள்கிறீர்கள்
பாம்பின் விஷம்போல
பாகுபாட்டை ஒளித்துவைத்து.
இந்தியச் சம்பந்தம்
பேசுகிற உங்களால்
இரத்தச் சம்பந்தம்
பேச முடிவதில்லை.
பதவியெனும் வேசியின்
பார்வைக்கு ஏங்கும்
உங்கள் ‘பண்பாட்டை’
பார்த்து விட்டுச் சொல்லுங்கள்:
அரசியல்வாதிகளே!
உங்களை விடவும்
இழிந்த சாதி உண்டா?
ஆக்கம்: பாபு
கடைசி வரியில்
அரசியல்வாதிகளே
என்றிருப்பதை
இந்திய அரசியல்வாதிகளே
என்றால்
இன்னும் பொருந்தும்
இல்லையா? 😄