சவூதி ஜித்தாவில் இடிக்கப்படும் கட்டிடங்கள் – வீட்டு வாடகை உயரும் அபாயம்!

ஜித்தா (13 நவ 2021): சவூதி அரேபியாவின் ஜித்தாவில் பல பழைய புதிய கட்டிடங்கள் பெருமளவில் இடிக்கப்படுகின்றன. குறிப்பாக இந்திய மக்கள் அதிகம் வசிக்கும் ஷராஃபியா மற்றும் பாக்தாதியாவில் பல கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன. விதி மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள், பழைய கட்டிடங்கள் இடிக்கப்படுகின்றன. சவூதி அரேபியாவில் ஜூலை 1 ஆம் தேதி செயல்படுத்தப்பட்ட சவுதி கட்டிடக் குறியீடு திட்டத்தின் அடிப்படையில் கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன.. இடிக்கப்படும் கட்டிடங்கள் மூன்று கட்ட எச்சரிக்கைக்குப் பிறகு இடிக்கப்பட்டு வருகிறது….

மேலும்...

சவூதி தவக்கல்னா அப்ளிகேஷனில் இணைக்கப்பட்டுள்ள புதிய சேவைகள்!

ரியாத் (07 நவ 2021): சவூதி அரேபியாவின் தவக்கல்னா அப்ளிகேஷனில் பல்வேறு புதிய சேவைகள் இணைக்கப்பட்டுள்ளன. சவுதி அரேபியாவில் சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து தவக்கல்னா தொடங்கப்பட்டது. கோவிட் தகவல்களை உள்ளடக்கிய இந்த செயலி தற்போது சவுதி அரேபியாவில் வசிப்பவர்களின் சுகாதார பாஸ்போர்ட்டாகவும் உள்ளது. இந்த அப்ளிகேஷன் 26 சேவைகளைக் கொண்டுள்ளது. புதிய புதுப்பிப்பில் தனிப்பட்ட வாகனம் மற்றும் அதன் நிலை குறித்த தகவல்கள் ஆகியவை அப்டேட் செய்யப்பட்டுள்ளது.. மேலும் ஒவ்வொரு தனிநபருக்கான டிஜிட்டல் கார்டுகள், சொந்த விசா…

மேலும்...

சவூதியில் தனியார் துறையில் அதிகரிக்கும் சவூதி தொழிலாளர்கள் – வேலை இழக்கும் வெளிநாட்டினர்!

ரியாத் (05 நவ 2021): சவூதியில் தனியார் நிறுவனங்களில் சென்ற ஆண்டை விட அதிக அளவில் சவூதி தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர். சவூதியில் உள்நாட்டு தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையிலும் வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்கும் வகையிலும், பல முனைப்புகளை சவூதி அரசு செய்து வருகிறது. அதன்படி கடந்த மூன்று மாதங்களில் அறுபதாயிரம் சவூதியர்கள் தனியார் துறை நிறுவனங்களில் பணிக்கு அமர்த்தப்படுள்ளனர். இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மட்டும் தனியார் துறையில் உள்நாட்டுமயமாக்கல் 23 சதவீதமாக உயர்ந்துள்ளது. சவூதியில்…

மேலும்...

ஓட்டுநர் இல்லாத மின் பேருந்துகளை இயக்க கத்தார் அரசு திட்டம்!

தோஹா (04 நவ 2021): கத்தார் தெருக்களில் ஓட்டுநர் இல்லாத மின்சார பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. போக்குவரத்து அமைப்புகளை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்றும் நோக்கத்துடன் முழு தானியங்கி மின்சார மினி பேருந்துகளை அறிமுகப்படுத்த கத்தார் திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்னதாக முழு தானியங்கி மின்சார பஸ் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. சோதனை வெற்றியடைந்தால், Fifa உலகக் கோப்பையில் பார்வையாளர்களுக்காக இ-மினி பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும். சீனாவின் மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான யுடோங், கத்தாரின் பொது போக்குவரத்து…

மேலும்...

சவூதியில் இக்காமாவை தவணை முறையில் புதுப்பிக்கும் வசதி அமல்!

ரியாத் (04 நவ 2021): சவூதி அரேபியாவில் தவணை முறையில் இக்காமாவை புதுப்பிக்கும் முறை அமலுக்கு வந்தது. இதன் மூலம் சவூதி அரேபியாவில் வசிக்கும் வெளிநாட்டினர், இக்காமா உள்ளிட்ட ஆவணங்களை மூன்று மாதங்கள் அல்லது ஆறு மாதங்களுக்கு புதுப்பிக்க முடியும். மேலும் தொழிலாளியின் ஸ்பான்சர்ஷிப்பை மாற்றுவதற்கான அனுமதி உட்பட பல்வேறு சேவைகள் அப்ஷர் இணையதளத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. சவூதி அரேபியாவில் தற்போது நடைமுறையில் உள்ளது என்னவென்றால், ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர்களின் லெவியை மாதம் 800 ரியால் வீதம்…

மேலும்...

சவூதியிலிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பணத்தின் சதவீதம் அதிகரிப்பு!

ரியாத் (03 நவ 2021): சவுதி அரேபியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பும் சதவீதம் சென்ற ஆண்டை விட அதிகரித்துள்ளது. சவூதி மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி, கடந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான முதல் ஒன்பது மாதங்களில், சவூதி வாழ் வெளிநாட்டினர் 110.23 பில்லியன் ரியால்களை அனுப்பியுள்ளனர். ஆனால் இந்த ஆண்டு அது ஆறு சதவீதம் உயர்ந்து 116.32 பில்லியன் ரியால்களாக உள்ளது. அதே சமயம், வெளிநாடுகளில் இருந்து வரும் பணம் கடந்த…

மேலும்...

கத்தார் திரைப்பட விழாவில் காரில் இருந்தபடியே சினிமா பார்க்கும் வசதி!

தோஹா (01 நவ 2021): கத்தார் அஜியால் திரைப்பட விழாவில் டிரைவ்-இன் சினிமா வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.. இதற்காக லூசில் சிட்டியில் வாகனங்களில் இருந்தபடியே திரைப்படம் பார்க்க பெரிய திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. கத்தாரில் நவம்பர் 7ஆம் தேதி தொடங்கும் அஜியால் திரைப்பட விழாவின் ஒன்பதாவது பதிப்பில் 44 நாடுகளைச் சேர்ந்த 85 படங்கள் இடம்பெறும். கோவிட் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிறகு தோஹா ஃபிலிம் இன்ஸ்டிடியூட் தனது முதல் AGIA திரைப்பட விழாவை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இம்முறையும் கடந்த…

மேலும்...

அனுமதியின்றி மரங்களை வெட்டினால் ரூ. 4 லட்சம் வரை அபராதம்!

ரியாத் (28 அக் 2021): சவூதி அரேபியாவில் அனுமதியின்றி மரங்களை வெட்டினால் 20 ஆயிரம் ரியால் (இந்திய ரூபாயில் 4 லட்சம் வரை) அபராதம் விதிக்கப்படும். பசுமை சவுதி திட்டத்தின் ஒரு பகுதியாக, முதற்கட்டமாக நாடு முழுவதும் 50 கோடி மரங்கள் நடப்படும் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதற்கிடையில், சவூதி தாயிஃப் நகரில் அனுமதியின்றி மரங்களை வெட்டிய மூன்று பேருக்கு அபராதம் விதிக்கப்படுள்ளது. . புவி வெப்பமடைதல் மற்றும் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில் சுற்றுச்சூழல் சட்டத்தை சவுதி…

மேலும்...

சவூதிக்கு வரமுடியாமல் தவிப்பவர்களின் விசா காலம் மேலும் நீட்டிப்பு!

ரியாத் (25 அக் 2021): சவூதிக்கு பயணத் தடை உள்ள நாடுகளை சேர்ந்தவர்களின் வருகை (விசிட்) விசாவின் செல்லுபடியாகும் காலம் நவம்பர் 30 வரை நீட்டிக்கப்படும் என்று சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. இதன்மூலம் பயணத் தடை உள்ள ​​இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, எகிப்து, துருக்கி, பிரேசில், எத்தியோப்பியா, வியட்நாம், ஆப்கானிஸ்தான் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் பயனடைவார்கள். . கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவியதைத் தொடர்ந்து அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின்படி…

மேலும்...

பதவியேற்பு விழாவில் கவர்னருக்கு விழுந்த பளார் – அதிர்ச்சி வீடியோ!

ஈரான் (24 அக் 2021): ஈரானில் கவர்னர் பதவியேற்பு விழாவில் பேசிக் கொண்டு இருந்தபோது கவர்னரை மர்ம நபர் பளார் என்று அடித்த காட்சி வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஈரானில் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட அபிதின் கோரம் பதியேற்பு விழாவில் பேசிக் கொண்டு இருந்த நிலையில் மேடை ஏறிய மர்ம நபர் திடீரென அவரது பின்னந்தலையில் பளார் என்று அடித்து சண்டையிட தொடங்கினார். உடனடியாக பாதுகாப்பு பணியில் பாதுகாவலர்கள்…

மேலும்...