ரியாத் (07 நவ 2021): சவூதி அரேபியாவின் தவக்கல்னா அப்ளிகேஷனில் பல்வேறு புதிய சேவைகள் இணைக்கப்பட்டுள்ளன.
சவுதி அரேபியாவில் சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து தவக்கல்னா தொடங்கப்பட்டது. கோவிட் தகவல்களை உள்ளடக்கிய இந்த செயலி தற்போது சவுதி அரேபியாவில் வசிப்பவர்களின் சுகாதார பாஸ்போர்ட்டாகவும் உள்ளது.
இந்த அப்ளிகேஷன் 26 சேவைகளைக் கொண்டுள்ளது. புதிய புதுப்பிப்பில் தனிப்பட்ட வாகனம் மற்றும் அதன் நிலை குறித்த தகவல்கள் ஆகியவை அப்டேட் செய்யப்பட்டுள்ளது..
மேலும் ஒவ்வொரு தனிநபருக்கான டிஜிட்டல் கார்டுகள், சொந்த விசா வைத்திருப்பவர்களின் விவரங்கள், உம்ரா மற்றும் மக்கா நுழைவுக்கான அனுமதிகள், மற்றும் அவசர மருத்துவ தேவைகளுக்கு மற்றும் பல்வேறு நிகழ்வுகளுக்கான அனுமதிகளைப் பெறுதல் ஆகியவை உள்ளடக்கியுள்ளன.