இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளை சேர்ந்தவர்கள் சவூதி அரேபியாவிற்குள் நுழைய தற்காலிக தடை!

ரியாத் (02 பிப் 2021): சவூதி அரேபியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலை தடுக்கும் அடுத்த கட்ட நகர்வாக இந்தியா உள்ளிட்ட, 20 குறிப்பிட்ட நாடுகளிலிருந்து வரும் வெளிநாட்டினர் சவூதி அரேபியாவிற்கு நுழைய தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சவுதி பத்திரிகை நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பை மேற்கோள் காட்டி சவுதி கெசட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, சவுதிக்குள் நுழைய தடை செய்யப்பட்டுள்ள நாடுகளின் பட்டியல் விவரம்: அர்ஜென்டினா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்,…

மேலும்...

பாலஸ்தீன முன்னேற்றத்திற்கான பைடன் திட்டம் – அரபு நாடுகள் வரவேற்பு!

துபாய் (28 ஜன 2021): பாலஸ்தீனத்திற்கு சாதகமாக தீர்வு ஏற்படுத்தப்படும் என்ற பைடன் நிர்வாகத்தின் முடிவை அரபு நாடுகள் வரவேற்றுள்ளன. அமெரிக்க அதிபர் பைடன் ஆட்சியில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறார். ஏற்கனவே ட்ரம்ப் நிர்வாகம், முஸ்லீம் நாடுகள் அமெரிக்காவில் நுழைய விதித்த தடையை நீக்கினார். இந்நிலையில் டிரம்ப் நிர்வாகத்தால் முடிவுக்கு வந்த பாலஸ்தீனத்துடனான இராஜதந்திர உறவுகளை மீண்டும் தொடங்க உள்ளதாக பைடன் அறிவித்துள்ளார். மேலும் பாலஸ்தீனிய சமூகம் மீது “அனுதாப நிலைப்பாட்டை” எடுக்கும் என்று பிடன்…

மேலும்...

சவூதி சுகாதார அமைச்சருடன் இந்திய தூதுவர் சந்திப்பு – இந்தியாவுடனான விமான போக்குவரத்துத் தடையை விரைவில் நீக்க கோரிக்கை!

ரியாத் (27 ஜன 2021): இந்தியா- சவூதி அரேபியா இடையே விமான போகுவரத்தை விரைவில் தொடங்குவது தொடர்பாக விவாதிக்க இந்திய தூதரும் சவுதி சுகாதார அமைச்சரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். கோவிட் 19 பரவலை தொடர்ந்து இந்தியா உட்பட சில நாடுகளுக்கு சவூதி அரேபியா விதித்துள்ள விமான தடை மார்ச் இறுதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் கோவிட் பரவல் அதிகமாக இருந்ததன் விளைவாக இந்த தடை அமலில் உள்ளது. ஆனால் சில ஒப்பந்தங்களின் அடிப்படையில்…

மேலும்...

சவூதி அரேபியாவுக்கு பொறியாளர் வேலைக்கு வருபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

ரியாத் (21 ஜன 2021): வெளிநாடுகளிலிருந்து சவுதி அரேபியாவுக்கு பொறியாளர் பணிக்கு வருவதற்கு முன்பு தொழில்முறை தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொறியியல் பணிகளின் தரத்தை உறுதி செய்வதன் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. நாட்டில் தற்போதுள்ள பொறியியலாளர்களும் தகுதித் தேர்வை பல்வேறு கட்டங்களில் முடிப்பார்கள். தற்போது நாட்டில் பணிபுரியும் தகுதிவாய்ந்த வெளிநாட்டு பொறியியலாளர்களைக் கண்டுபிடிப்பதற்கான தொழில்முறை தேர்வு கடந்த மாதம் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, புதிய பணி விசாக்களில் வரும்…

மேலும்...

சவூதி அரேபியா உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி!

ரியாத் (17 ஜன 2021): சவுதி அரேபியா உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி மருத்துவப் பரிசோதனைக்குத் தயாராக இருக்கிறது. இதற்கான அனுமதி சம்பந்தப்பட்ட துறைகள் ஆய்வுக்குப் பிறகு வழங்கப்படும். சவுதி அரேபியா உருவாகியுள்ள கோவிட் 19 தடுப்பூசியின், முன் மருத்துவ ஆய்வுகள் முடிக்கப்பட்டுள்ளன. தொற்று நோயியல் பேராசிரியர் டாக்டர் இமான் அல் மன்சூரின் தலைமையில், இமாம் அப்துல் ரஹ்மான் பின் பைசல் பல்கலைக்கழகம் இந்தத் தடுப்பூசியைத் தயாரித்துள்ளது. மருத்துவ பரிசோதனைகள் முடிந்ததும் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்.

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்தில் ரெட் அலர்ட்!

துபாய் (17 ஜன 2021): ஐக்கிய அரபு அமீரகத்தில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாய் உட்பட பல பகுதிகளில் கடும் மூடுபனி மற்றும் மங்கலான கால சூழ்நிலையால் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும் என்று வானிலை அலுவலகம் எச்சரித்துள்ளது. அபுதாபி, துபாய், ஷார்ஜா மற்றும் அஜ்மான் பகுதிகளில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்...

லாக்டவுன் காலத்தில் சாதித்த மாணவி ஆமினா முஹம்மது – வீடியோ இணைப்பு!

ஜித்தா (15 ஜன 2021): புனித நூலான திரு குர்ஆனின் எழுத்துக்களையும் மக்காவின் (கஃபா) கிஸ்வா அரபி எழுத்துக்களையும் வனப்பெழுத்து (Calligraphy) மூலம் வடிவமைத்து சாதித்துள்ளார் மாணவி ஆமினா முஹம்மது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அமினா முகமது, சவூதி அரேபியாவின் ஜித்தாவில் உள்ள சர்வதேச இந்தியப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் ஓவியம் எதுவும் முறையாக பயிலாத நிலையில் கோவிட் காலத்தின் லாக்டவுன் நேரத்தில்தான் அமீனா யூடியூப் மூலம் அரபி மொழியின் வனப்பெழுத்து (Calligraphy) வரைவதை…

மேலும்...

மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு சவூதி-கத்தார் விமான சேவை!

ரியாத் (12 ஜன 2021): மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு சவூதி கத்தார் நாடுகளுக்கு இடையேயான தினசரி விமான சேவை மீண்டும் தொடங்கியது. நேற்று ரியாத் விமான நிலையத்தில் கத்தரிலிருந்து வந்த விமானம் தரையிறங்கியது. விமான நிலையத்தில் கத்தர் பயணிகளுக்கு அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்கிடையில், கத்தாரில் உள்ள பல்வேறு சுற்றுலா நிறுவனங்கள் கத்தாரிலிருந்து உம்ரா யாத்திரைக்கான ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளன. ரியாத்தைத் தொடர்ந்து ஜித்தா, தம்மாம் உள்ளிட்ட பிற பிரதான நகரங்களுக்கும் கத்தாரிலிருந்து விமான சேவைகள் தொடங்கப்படவுள்ளன.

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியர்களுக்கும், கோவிட் 19 தடுப்பூசி போடுவதில் முக்கியத்துவம்!

துபாய் (12 ஜன 2021): ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கோவிட் தடுப்பூசி வழங்குவதில் இந்தியர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அழைப்புகள் கொடுக்கப்படுகின்றன. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இந்திய சங்கங்களும் கோவிட் தடுப்பூசி விநியோகத்தில் இந்தியர்களுக்கு உதவி வருகின்றன. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வெளிநாட்டினர் உட்பட அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஒவ்வொரு நாளும் கோவிட் தடுப்பூசி பெறுகின்றனர். அதுமட்டுமல்லாமல் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் அனைத்து வெளிநாட்டினருக்கும் தடுப்பூசி வழங்க ஐக்கிய அரபு அமீரகம் முடிவு செய்துள்ளது.

மேலும்...

சவூதி அரேபியாவை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகமும் கத்தார் போக்குவரத்து எல்லையை திறக்கிறது!

துபாய் (09 ஜன 2021): சவூதி அரேபியாவை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகமும் கத்தார் நாட்டின் கடல், நிலம் மற்றும் விமான போக்குவரத்து எல்லையை சனிக்கிழமை திறக்கிறது. சவூதி அரேபியாவின் அல் உலாவில் நடந்த வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (ஜி.சி.சி) கூட்டத்தில் கட்டாருக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் கடந்த வாரம் கையெழுத்தானது. இந்நிலையில் கத்தார் உடனான வர்த்தக மற்றும் போக்குவரத்து உறவுகளை ஐக்கிய அரபு அமீரகமும் நாளை மீண்டும் தொடங்குகிறது. இந்த முடிவை…

மேலும்...