ரியாத் (17 ஜன 2021): சவுதி அரேபியா உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி மருத்துவப் பரிசோதனைக்குத் தயாராக இருக்கிறது. இதற்கான அனுமதி சம்பந்தப்பட்ட துறைகள் ஆய்வுக்குப் பிறகு வழங்கப்படும்.
சவுதி அரேபியா உருவாகியுள்ள கோவிட் 19 தடுப்பூசியின், முன் மருத்துவ ஆய்வுகள் முடிக்கப்பட்டுள்ளன.
தொற்று நோயியல் பேராசிரியர் டாக்டர் இமான் அல் மன்சூரின் தலைமையில், இமாம் அப்துல் ரஹ்மான் பின் பைசல் பல்கலைக்கழகம் இந்தத் தடுப்பூசியைத் தயாரித்துள்ளது. மருத்துவ பரிசோதனைகள் முடிந்ததும் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்.