கத்தாரில் மரணமடைந்த தமிழரின் உடலை நல்லடக்கம் செய்த இந்தியன் சோஷியல் ஃபாரம்!

தோஹா (03 ஜூலை 2020): புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, பனங்குளம் கிராமத்தை சேர்ந்த செல்வம் (வயது 46) என்பவர் கடந்த 5ஆண்டுகளாக கத்தாரில் பணிபுரிந்து வந்துள்ளார் . கொரோனா நெருக்கடி காரணமாக வேலை இழந்து கடும் மன உளைச்சலில் இருந்த அவர் கடந்த ஏப்ரல் 24 அன்று உயிரிழந்தார். கொரோனா தொற்று காரணமாக அச்சாதரணமான சூழ்நிலை நிலவுவதால் அவரது உடலை தாயகம் கொண்டு செல்ல முடியாமல் கடந்த இரு மாதங்களாக செய்வதறியாமல் திகைத்த நிலையில் சென்ற…

மேலும்...

சாத்தான்குளம் சம்பவத்திற்கு இந்தியன் சோஷியல் ஃபாரம் கண்டனம்!

ஜித்தா (02 ஜூலை 2020): இந்தியன் சோசியல் ஃபோரம் (ISF) ஜித்தா பிரிவு சாத்தான்குள சம்பவத்திற்கான கண்டனத்தை பதிவு செய்துள்ளது. இதுகுறித்து அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் காவல்துறையினரின் கொடூர தாக்குதலால் உயிரிழந்த வியாபாரிகள் பெனிக்ஸ் மற்றும் ஜெயராஜ் அவர்களின் குடும்பத்தினருக்கு இந்தியன் சோசியல் ஃபோரம் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறோம். கடந்த ஜுன் 20, வெள்ளிக்கிழமையன்று இரவு 7.30 மணிக்கு, பொது ஊரடங்கின் போது இரவு 9மணிக்கு மேல்…

மேலும்...

சவூதி அரேபியாவில் வசிப்பவர்களுக்கு மட்டும் குறைந்த எண்ணிக்கையில் ஹஜ் யாத்திரைக்கு அனுமதி!

ரியாத் (22 ஜூன் 2020): சவூதி அரேபியாவில் வசிக்கும் அனைத்து உள்நாட்டு வெளிநாட்டினருக்கு மட்டும் குறிப்பிட்ட அளவில் இவ்வருடம் (2020) ஹஜ் யாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திங்களன்று இதுகுறித்து ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் காரணமாக இவ்வாண்டு (2020 – 1441) வெளிநாட்டு ஹஜ் யாத்திரீகர்களுக்கு அனுமதி இல்லை .எனினும் உள் நாட்டில் வசிக்கும் குறைந்த அளவிலான யாத்ரீகர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.” என்று தெரிவிக்கப்படுள்ளது. மேலும் கொரோனா…

மேலும்...

ஜூலை 7 முதல் விசிட் விசா மற்றும் சுற்றுலா விசாவில் அமீரகம் வர அனுமதி!

துபாய் (22 ஜூன் 2020): இதுவரை உலகம் கண்டிராத கொடிய கொரோனா வைரஸ் தொற்றுநோயின் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் பலவிதமான பாதிப்புகளை சந்தித்துள்ளன. குறிப்பாக சுற்றுலாத்துறையும் அதனை சார்ந்த விமான போக்குவரத்து சேவை மற்றும் பயண சேவைகள் வழங்கக்கூடிய அனைத்து நிறுவனங்களும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. சில மாதங்களுக்கு பிறகு கொரோனாவின் தாக்கம் தற்போது குறைந்திருக்கும் தறுவாயில், ஒரு சில நாடுகள், தங்களின் நாடுகளில் அமல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகளையும், தடைகளையும் விலக்கிக்கொண்டு வருகின்றன. உலக அளவில் சுற்றுலா…

மேலும்...

ஜூன் 21 ஆம் தேதி முதல் இயல்பு நிலைக்கு திரும்பும் சவூதி அரேபியா!

ரியாத் (20 ஜூன் 2020): கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்டிருந்த நிலையில் ஜூன் 21 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை முதல் சில கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு சவூதி அரேபியா இயல்பு நிலைக்கு திரும்புகிறது. இதுகுறித்து சவூதி உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜுன் 21 2020 முதல் அனைத்து பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகள் இயங்கும். ஆனால் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்தல் அவசியமாகும். வெளிநாட்டு விமான…

மேலும்...

உலக இரத்த தான தினத்தை முன்னிட்டு இந்தியன் சோசியல் ஃபாரம் ஏற்பாடு செய்த ஆன்லைன் நிகழ்ச்சி!

ஜித்தா (19 ஜூன் 2020): உலக இரத்த தான தினத்தை முன்னிட்டு இந்தியன் சோசியல் ஃபாரம் ஆன்லைன் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. வெளிநாட்டிலுள்ள இந்திய சமூகத்தின் சமூக நல அமைப்பான இந்தியன் சோசியல் ஃபாரம் இரத்த நன்கொடையாளர்கள் குழு (ஐ.எஸ்.எஃப்) 5 ஆண்டுகளாக இரத்த தானத்தில் ஈடுபட்டுள்ளது. மேலும் 2019 ஆம் ஆண்டில் ‘நன்கொடையாளர்கள் பூங்கா (Donor’s Park)’ ரத்த தானம் வழங்கும் குழு மற்றும் ஒரு குறிப்பிட்ட இரத்த தேவைகளின் அடிப்படையில் இரத்த தானம்…

மேலும்...

கொரோனா காலத்தில் ஜித்தாவிலிருந்து சென்னை புறப்பட்ட முதல் விமானம் – வழியனுப்பிய தமுமுகவினர்!

ஜித்தா (06 ஜூன் 2020): கொரோனா காலத்தில் ஜித்தாவிலிருந்து சென்னை புறப்பட்ட முதல் விமானத்தில் சென்ற 151 தமிழர்களை தமுமுக தன்னார்வலர்கள் வழியனுப்பி வைத்தனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் முதல் விமானம் ஜித்தாவிலிருந்து சென்னைக்கு பகல் 3 மணியளவில் 32 கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்ட 151 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. ஜித்தா இந்திய தூதரக அதிகாரிகள் ஹம்னா மரியம் மற்றும் அம்ஜத் ஆகியோர் ஏற்பாட்டில், ஜித்தா தமிழ் சங்கம் (JTS) சிராஜூதீன், ரமணா மற்றும் ஜித்தா…

மேலும்...

ஜித்தா இந்திய பாஸ்போர்ட் விசா தொடர்பான VFS Global அலுவலகம் ஜூன் 3 முதல் திறப்பு!

ஜித்தா (29 மே 2020): ஜித்தா இந்திய பாஸ்போர்ட் விசா தொடர்பான VFS Global அலுவலகம் ஜூன் 3 முதல் இயங்கும் என்று இந்திய தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்திய தூதரகம் தொடர்பான பணிகள் (அவசர தேவைகள் தவிர) நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஊரங்கு படிப்படியாக குறைக்கப்படவுள்ள நிலையில், இந்திய பாஸ்போர்ட் விசா தொடர்பான ஜித்தா ஹைல் சாலை VFS Global அலுவலகம் வரும் ஜூன் 3 ஆம் தேதி முதல் இயங்கும். மேலும்…

மேலும்...

கொரோனா பாதிப்பால் மரணமடைந்த தமிழரின் உடல் இந்தியன் சோஷியல் ஃபாரம் முயற்சியில் ஜித்தாவில் நல்லடக்கம்!

ஜித்தா (28 மே 2020): கொரானா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த திருப்பூர் பல்லடத்தைச் சார்ந்த தமிழர் (வயது 53), 23-5-2020 அன்று சிகிச்சை பலனின்றி சவுதி அரேபியா, ஜித்தாவில் மரணமடைந்தார். அவரது உறவினர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவரது உடலை நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை இந்தியன் சோசியல் ஃபோரத்தின் ஜித்தா தமிழ் மாநில நிர்வாகிகள் ஊரடங்கின் போதும் முன்னின்று செய்தனர். இந்திய துணை தூதரகத்தின் உதவியுடன் சட்ட ரீதியான அனைத்து ஆவணங்களையும் அரசு அதிகாரிகளிடம் சமர்பித்து குறுகிய நேரத்தில் நல்லடக்கம் செய்வதற்கான…

மேலும்...

கலக்கப்போவது யாரு குழுவுடன் ஜித்தா முத்தமிழ் சங்கம் நடத்திய இணைய வழி லாக்டவுன் கலாட்டா!

ஜித்தா (28 மே 2020): கொரோனோ நுண்கிருமி தொற்று பேரிடர் 24 மணி நேர ஊரடங்கில்… விடுமுறை காலத்தில்… ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம் நடத்திய விகடகவி 2.0 எனும் நகைச்சுவை கலந்துரையாடல் நிகழ்ச்சியான Lockடவுன் கலாட்டா நிகழ்ச்சி நடந்தது. சென்ற டிசம்பர் மாதம் ஜெத்தா மாநகரில் ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம் நடத்திய மாபெரும் நிகழ்ச்சியான விகடகவியில் நவீன விகடகவி எனும் விருதினைப் பெற்ற கலக்கப் போவது யாரு சீசன் 7 இன் வெற்றியாளர் அசார் மீண்டும் இந்த…

மேலும்...