சட்டத்திற்கு விரோதமான செயலை தடுத்தேன் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

சென்னை (12 மார்ச் 2022): ஜாமினில் வெளியே வந்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது கள்ள ஓட்டு போட முயற்சித்ததாகக் கூறி திமுக பிரமுகர் ஒருவரை தாக்கி, அரைநிர்வாணமாக அழைத்து வந்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது கொலை மிரட்டல், தாக்குதல், கலகம் செய்யத் தூண்டுதல் உள்ளிட்ட 10 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட ஜெயக்குமார்…

மேலும்...

சிகிச்சை செய்வதாகக் கூறி நண்பனின் மனைவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டவர் கைது!

ஆம்பூர் (11 மார்ச் 2022): நண்பனின் மனைவிக்கு மாந்திரீகம் மூலம் சிகிச்சை அளிப்பதாகக் கூறி நண்பனின் மனைவியிடம் அத்துமீறியவர் கைது செய்யப்படுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பி கஸ்பா பகுதியைச் சேர்ந்தவர் சல்மான். இவர் காலனி தொழிற்சாலையில் பணி செய்துவருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் சல்மானின் மனைவிக்கு கடந்த சில தினங்களாக உடல்நிலை கோளாறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனால் சல்மானின் நெருங்கிய நண்பரான துத்திபட்டு கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த ஷபிக்…

மேலும்...

செந்தில் பாலாஜி காட்டில் மழை!

கோவை (11 மார்ச் 2022): தமிழகத்தில் கடந்த மாதம் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சியான திமுகவிற்கு பெரிதும் சாதகமாக அமைந்தது. குறிப்பாக கோவை மாவட்ட வெற்றியானது முதல்வர் மு.க.ஸ்டாலினிற்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது. கோவை மாவட்டத்தில் கிடைத்த வெற்றிக்காக அமைச்சர் செந்தில் பாலாஜியை கொண்டாடி தீர்த்துவிட்டார் அவர். இதற்கிடையில் கோவை மாநகராட்சியின் முதல் மேயராக 19வது வார்டு கவுன்சிலர் கல்பனா ஆனந்தகுமார் பதவியேற்றுக் கொண்டார். இவருக்கு வயது 40. இவர் கோவையின் 6வது…

மேலும்...

பாதுகாப்பு கோரி அமைச்சர் சேகர்பாபுவின் மகள் காவல்துறையிடம் தஞ்சம்!

பெங்களூரு (08 மார்ச் 2022): காதல் திருமணம் செய்து கொண்ட அமைச்சர் சேகர் பாபுவின் மகள், தந்தையிடம் இருந்து பாதுகாப்பு கோரி பெங்களூர் காவல்துறையிடம் தஞ்சம் அடைந்துள்ளார்.. தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருப்பவர் சேகர்பாபு. இவர் முதல்வர் மு.க.ஸ்டாலினின் நம்பிக்கைக்குரிய அமைச்சர்களில் ஒருவராகக் கருதப்படுபவர். இந்நிலையில், இவரது மகள் ஜெயகல்யாணி, சதீஷ்குமார் என்பவரைக் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை எதிர்த்து காதல் திருணம் செய்து கொண்டுள்ளார். இந்தத் தம்பதி நேற்று பெங்களூர் போலீஸ்…

மேலும்...

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் அப்போலோ டாக்டர் பரபரப்பு வாக்குமூலம்!

சென்னை (07 மார்ச் 2022): முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில்  ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில் அப்போலோ டாக்டர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் அடுத்த கட்ட விசாரணையை மீண்டும் துவக்கியுள்ளது. முதல்நாள் விசாரணையில் அப்போலோ டாக்டர் பாபு மனோகர் வாக்குமூலம் அளித்துள்ளார். அதன்படி 2016ல் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்கும் நாளுக்கு முன் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. டாக்டர் சிவக்குமார் அழைத்ததன் பேரில்…

மேலும்...

திமுக எம்.எல்.ஏ கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!

சென்னை (06 மார்ச் 2022): திமுக கடலூர் எம்.எல்.ஏ. அய்யப்பன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் கடலூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அய்யப்பன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். இதற்கிடையே நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கட்சி கட்டுப்பாட்டை மீறியதால் பல நிர்வாகிகள் திமுகவிலிருந்து நீக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும்...

ஓபிஎஸ்-இபிஎஸ் என்னை கட்டுப்படுத்த முடியாது – ஓபிஎஸ் தம்பி பரபரப்பு பேட்டி!

தேனி (05 மார்ச் 2022): ”அதிமுகவிற்கு சசிகலாவின் தலைமைதான் தேவைப்படுகிறது. என் விருப்பப்படியே சசிகலாவைச் சந்தித்தேன்” என்று  ஓ.ராஜா தெரிவித்துள்ளார். தென்மாவட்டங்களில் உள்ள தொண்டர்களைச் சந்திப்பதற்காக சசிகலா பயணம் மேற்கண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து  திருச்செந்தூரில் சசிகலாவை ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா சந்தித்தார். இதனால் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஓ.ராஜா நீக்கப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. ஓ.ராஜாவோடு சசிகலாவைச் சந்திக்கச் சென்ற முருகேசன், வைகை கருப்புஜி, சேதுபதி ஆகிய மூவரும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தேனியில் செய்தியாளர்களைச் சந்தித்த…

மேலும்...

முதலமைச்சருக்கு நெருக்கடி கொடுத்த தஞ்சை திமுக எம்.பி!

அதிராம்பட்டினம் நகர்மன்றத் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெற்றிருந்த நிலையில், கட்சித் தலைமை கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குத் துணை சேர்மன் பதவியை அறிவித்திருந்தது. அதன்படி, 19 ஆவது வார்டில் வெற்றி பெற்ற தில் நிவாஸ் பேகம் நகராட்சி மன்ற துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட இருந்த நிலையில், திமுக நகரச் செயலாளர் குணசேகரனைத் துணைச் சேர்மனாகத் தேர்வு செய்துள்ளதற்கு மாவட்ட எம்.பி S.S.பழனி மாணிக்கம் காரணம் என்று கூட்டணிக் கட்சிகள் அதிருப்தியடைந்துள்ளனர்….

மேலும்...

சென்னை மேயராகும் 28 வயது பிரியா ராஜன்!

சென்னை (03 மார்ச் 2022): சென்னை மேயராக 28 வயது பிரியா ராஜன் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். சென்னை மாநகராட்சியில், திமுக மட்டும் 153 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் வெற்றிப்பெற்ற 100-க்கும் மேற்பட்ட பெண்களில், ரிப்பன் மாளிகையை ஆளப் போகும் மேயர் பதவி யாருக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதென்ற எதிர்பார்ப்பு எகிறியது. இந்நிலையில், திரு.வி.நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 74-வது வார்டில் வெற்றி பெற்ற பிரியா ராஜன், சென்னை மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். 28 வயதான பிரியா ராஜன்…

மேலும்...

தலைமையேற்கிறாரா சசிகலா? – பரபரக்கும் அதிமுக!

தேனி (03 மார்ச் 2022): சசிகலாவை அதிமுகவிற்கு தலைமையேற்க வைக்க வேண்டும் என்று நிர்வாகிகள் தரப்பில் அழுத்தம் வருவதால் அதிமுக தலைமை பரபரப்பில் உள்ளது. அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரான ஓ.பி.எஸ் நேற்று தன்னுடைய பண்ணை வீட்டில் தேனி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. அடைந்த தோல்விக்கான காரணங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது இந்தக் கூட்டத்தில், சசிகலா மற்றும் தினகரனை மீண்டும்…

மேலும்...