சென்னை (06 மார்ச் 2022): திமுக கடலூர் எம்.எல்.ஏ. அய்யப்பன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் கடலூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அய்யப்பன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கட்சி கட்டுப்பாட்டை மீறியதால் பல நிர்வாகிகள் திமுகவிலிருந்து நீக்கப்பட்டு வருகின்றனர்.