சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

சென்னை (30 டிச 2021): சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 8 மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்துவருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். மழைநீர் தேக்கம் மட்டுமன்றி புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் கடுமையாக ஏற்பட்டுள்ளது. தொடர் மழை, போக்குவரத்து நெரிசல், மழைநீர் தேக்கம் போன்றவற்றால் பணி முடிந்து வீட்டுக்கு செல்பவர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,…

மேலும்...

மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்துகள் விற்றால் மருந்தகங்கள் மீது நடவடிக்கை!

சென்னை (30 டிச 2021): மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்துகள் விற்றால் மருந்தகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் அடிப்படையில் சட்ட விரோதமாக போதைப்பொருள் விற்பனை செய்வது தொடர்பாக சிறப்பு சோதனை இம்மாதம் 6ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இந்த சோதனையில் 2,000 கிலோ கஞ்சா மற்றும் 21 கிலோ ஹெராயின் என மொத்தமாக 23 கோடி…

மேலும்...

பெட்ரோல் விலை ரூ 25 குறைப்பு!

புதுடெல்லி (29 டிச 2021): ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருசக்கர வாகனத்திற்கு மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.25 குறைக்கப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி முதல் பெட்ரோல் விலை குறைப்பு அமலுக்கு வருவதாக ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார். மேலும் இந்த விலை குறைப்பு சலுகை இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏழை, நடுத்தர மக்களின் பாதிப்பைக் குறைக்க விலை குறைப்பை அமல்படுத்துவதாக…

மேலும்...

சென்னையில் குடிசை மாற்று வாரிய வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டம்!

சென்னை (27 டிச 2021): சென்னை திருவொற்றியூரில் உள்ள அரிவாக்குளத்தில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ள டி-பிளாக் வீடுகள் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டடத்தில் விரிசல் ஏற்பட தொடங்கியதை கண்ட மக்கள், அப்படியே துரிதமாக வெளியேறியதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும் இடிந்து விழுந்த கட்டட இடிபாடுகளில் யாரேனும் சிக்கி உள்ளனரா என தீயணைப்பு துறையும் மீட்புப்பணியினரும் தேடுதல் பணியை நடந்து வருகின்றனர். இந்த விபத்தில் கிட்டத்தட்ட 24 வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளது. இதனால் அப்பகுதியில்…

மேலும்...

எம்ஜிஆர் நினைவுகளில் அன்வர் ராஜா – கட்சியை விட்டு விலக்கியதால் வருத்தம்!

இராமநாதபுரம் (25 டிச 2021): தமிழ்நாட்டில் எம்ஜிஆரின் பெயரை உச்சரிக்காமல் யாராலும் அரசியல் நடத்த முடியாது என்று நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அன்வர் ராஜா தெர்வித்துள்ளார். மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி அதிமுகவில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அன்வர் ராஜா பெயரில் இராமநாதபுரம் பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த சுவரொட்டிகளில், ‘தலைவா… கட்சியில் இருந்து விலகி இருக்க முடியவில்லை, தினமும் உன்னை நினைக்கிறேன், அதில் நான் என்னை…

மேலும்...

முஸ்லிம்களை படுகொலை செய்யுங்கள் – அதிர்ச்சி அடைய செய்யும் இந்துத்வா அமைப்பினரின் மாநாடு!

புதுடெல்லி (25 டிச 2021): முஸ்லிம்களை படுகொலைச் செய்ய வேண்டும் என்று உத்தர்காண்டில் நடைபெற்ற இந்துத்துவா மாநாட்டில் பிரகடனம் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர்காண்ட் மாநிலம் ஹரித்வாரில் பல்வேறு இந்துத்துவா அமைப்புகள் இணைந்து நடத்திய ‘தர்ம சன்சத்’ என்ற பெயரில் இந்துத்துவ மாநாடு நடந்தேறியுள்ளது. அதில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகளும் முஸ்லிம்களை கொலை செய்ய வேண்டும் என்பதாகவும் பிரகடனப்படுத்தப்பட்டள்ளது. இந்த மாநாடு டிசம்பர் 17 முதல் 19 வரை நடைபெற்றது. விழாவில் பேசிய தலைவர்கள்…

மேலும்...

தமிழகத்தில் 34 பேருக்கு ஒமிக்கிரான் பாதிப்பு – அமைச்சர் தகவல்!

சென்னை (23 டிச 2021): தமிழகத்தில் மேலும் 34 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதன்முலம் தமிழகம் இந்திய அளவில் 3வது இடத்தில் உள்ளது. ஏற்கெனவே நைஜீரியாவில் இருந்துவந்த ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது உறுதியாகியிருந்தது. ஆனால் தற்போது தமிழகத்தில் 34 ஆக அதிகரித்துள்ளது. சோதனைக்கு அனுப்பப்பட்டவர்களில் 60 பேருக்கு முடிவுகள் வந்துள்ளன; அதில் 33 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியானது. இன்னும் 24 பேருக்கான ஒமிக்ரான் முடிவு வரவேண்டியுள்ளதாகவும் அமைச்சர்…

மேலும்...

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளர் மரணம்!

சென்னை (21 டிச 2021): மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் உதவியாளராக பணிபுரிந்த சண்முகநாதன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். சுமார் 50 ஆண்டுகளாக தனி உதவியாளராக பணியாற்றிய சண்முகநாதனுக்கு வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் சண்முகநாதன் உயிரிழந்தார். கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோதும், எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதும் அவரது கருத்துகளை எழுத்துமூலம் வெளியிட்டவர் சண்முகநாதன். அரசியல் வட்டாரங்களில் கருணாநிதியின் நிழல் என்று அழைக்கப்பட்டார் இவர். கருணாநிதியால் எழுதமுடியாத சூழல் ஏற்பட்ட…

மேலும்...

கீழக்கரையில் ஆள் மாற்றி காவல்துறை விசாரணை மேற்கொண்டதால் பரபரப்பு!

இராமநாதபுரம் (21 டிச 2021): இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் போலி விசா தொடர்பாக காவல்துறை ஆள் மாற்றி விசாரணை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலி விசா தயாரித்து ஒருவரை ஓமன் நாட்டிற்கு அனுப்பியது தொடர்பாக கீழக்கரையைச் சேர்ந்த பக்ருதீன் என்பவரிடம் விசாரணை நடத்த டெல்லி காவல்துறையினர் வந்துள்ளனர். ஆனால் அதே ஊரைச் சேர்ந்த நபீல் என்பவரை பக்ரூதீன் என தவறாக நினைத்து அவரிடம் விசாரணை நடத்தியிருக்கின்றனர். மேலும் சீருடையில் இல்லாமால் சாதாரண உடுப்பில் வந்து விசாரணை நடத்திய…

மேலும்...

சுவர் இடிந்து விழுந்த நெல்லை பள்ளிக்கு தவறான சான்றிதழ் – அதிர்ச்சித் தகவல்!

நெல்லை (20 டிச 2021): நெல்லை பள்ளி கழிவறைச் சுவர் இடிந்து விழுந்த விவகாரத்தில் பள்ளி கழிவறைக்கு உறுதித் தன்மை குறித்துச் சான்றிதழ் வழங்கப் பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நெல்லை டவுன் பகுதியில் உள்ள சாஃப்டர் மேல்நிலைப் பள்ளியில் 17-ம் தேதி கழிவறைச் சுவர் இடிந்து விழுந்து மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். நான்கு பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாகவே இச்சம்பவம் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. சம்பவம் தொடர்பாக…

மேலும்...