கேரளா தொடர் கொலை – கோவையில் வழிபாட்டுத் தலங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!

கேரளா தொடர் கொலை – கோவையில் வழிபாட்டுத் தலங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு! கோவை (20 டிச 2021): கேரளாவில் எஸ்டிபிஐ மற்றும் பாஜக பிரமுகர்கள் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து கோவையில் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது. கேரளா, ஆலப்புழாவில் எஸ்.டி.பி.ஐ., கட்சி மாநில செயலர் ஷான் நேற்று முன்தினம் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நடந்து, 12 மணி நேரத்துக்குள் பா.ஜ.,வை சேர்ந்த ரஞ்சித் ஸ்ரீனிவாசன் என்பவரை மர்ம நபர்கள் கொலை செய்தனர். இதனால்…

மேலும்...

சிறுபான்மையினரை வாக்களிக்க விடாமல் தடுக்கும் முயற்சி – திருமாவளவன் குற்றச்சாட்டு!

திருச்சி (19 டிச 2021): தேர்தல் சீர்திருத்த மசோதாவிற்கு திமுக உள்ளிட்ட காட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள கலையரங்கம் வளாகத்தில் இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ், லேண்ட் டெவலப்பர்ஸ், நிலத் தரகர்கள் நல சங்கத்தின் சார்பில் மாநாடு நடைபெற்றது, இதில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசும்போது… மக்களவையில்…

மேலும்...

விபத்துக்கான 48 மணி நேர இலவச சிகிச்சை – முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

சென்னை 919 டிச 2021): தமிழகத்தின் எந்த பகுதியில் சாலை விபத்து நடந்தாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மற்றும் தனியார் என 609 மருத்துவமனைகளில் 48 மணி நேரத்துக்கு இலவச சிகிச்சை அளிக்கும் திட்டமான ‘இன்னுயிர் காப்போம் திட்டத்தை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகத்தில், சாலை விபத்தில் படுகாயம் அடைபவர்களுக்கு அருகில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனையில் 48 மணி நேரம் இலவச சிகிச்சை அளிக்கும் வகையில், “இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48’’ என்ற…

மேலும்...

ராஜேந்திர பாலாஜி வழக்கு குறித்து ஓபிஎஸ் மழுப்பல் பதில்!

சென்னை (18 டிச 2021): முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குறித்து கருத்து தெரிவிக்க அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மறுத்துவிட்டார் “ராஜேந்திர பாலாஜி மீதான குற்றச்சாட்டு, நீதிமன்றத்தில் வழக்காக நிலுவையில் உள்ளது. நீதிமன்ற கட்டுப்பாட்டில் அது இருப்பதால், அதுகுறித்து நான் கருத்துக்கூற விரும்பவில்லை.” என்றார். மேலும் “பள்ளிக்கூடங்களில் குழந்தைகளுக்கு நிகழும் பாலியல் குற்றங்களை தடுப்பது குறித்தும், இப்படியான விபத்துகளை தவிர்ப்பது குறித்தும் அரசுக்கும் முதல்வருக்கும் நான் அறிக்கை வெளியிட்டிருக்கிறேன். அரசு அதை கணக்கில் கொண்டு, விரைந்து நடவடிக்கை…

மேலும்...

நெல்லை – பள்ளி கழிவறைச்சுவர் இடிந்து விபத்து :3 மாணவர்கள் பலி!

நெல்லை (17 டிச2021): நெல்லையில் எஸ்.என்.ஹைரோட்டிலுள்ள பள்ளியொன்றில் கழிவறைச் சுவர் கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பரிதாமாக உயிரிழந்துள்ளனர். நெல்லை பொருட்காட்சி திடல் அருகேயுள்ள சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் சம்பவ இடத்திலேயே இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களின்றி 3 மாணவர்கள் உயர் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அங்கே மேலும் ஒரு மாணவர் உயிரிழந்துள்ளார். உடன் படித்த மாணவர்களின் இந்த உயிரிழப்பை தொடர்ந்து, அங்கு…

மேலும்...

தமிழகத்தில் மேலும் 4 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு?

சென்னை (16 டிச 2021): தமிழகத்தில் மேலும் 4 பேருக்கு ஒமிக்ரானுக்கு முந்திய அறிகுறி இருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார். சென்னை வளசரவாக்கத்தில் ஒருவருக்கு நேற்று ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், அவருடன் தொடர்புடைய மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, ஒரே இடத்திலிருந்து 11 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. இந்த மரபணு மாற்றமடைந்த கொரோனா தொற்று உடையவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணியை தீவிரமாக செய்து வருகிறோம்…

மேலும்...

தப்லீக் ஜமாஅத்தினர் மீது அவதூறு – மாரிதாஸ் மீண்டும் கைது!

தேனி(16 டிச 2021): தப்லீக் ஜமாஅத்தினர் மீது அவதூறு பரப்பிய வழக்கிலும் யூட்யூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். கொரோனா முதல் அலை பரவிய காலத்தில் தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரிக்க, தப்லீக் ஜமாஅத்தினர்தான் காரணம் என சித்தரிக்கும் வகையில் வீடியோவொன்று வெளியிட்டிருந்தார். அப்போது மேலப்பாளையத்தை சேர்ந்த ஒருவர் அந்த வீடியோவுக்கு எதிராக கொடுத்த புகாரின் அடிப்படையில், நெல்லை மேலப்பாளையம் காவல் நிலையத்தில் 04.04.2020 அன்று 292 A, 295 A, 505 ( 2), It act…

மேலும்...

வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு ரத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

புதுடெல்லி (16 டிச 2021):வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு ரத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு நிறைவேற்றிய அவசரச் சட்டத்தை ரத்து செய்து கடந்த நவம்பர் 1ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இதற்கு தடை விதிக்கக் கோரி தமிழக அரசு மற்றும் பல்வேறு தரப்பினர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன….

மேலும்...

தமிழகத்திற்குள் நுழைந்த ஒமிக்ரான் வைரஸ்!

சென்னை (15 டிச 2021): ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸால் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்போது, “நைஜீரியாவில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த மேலும் 7 பேருக்கும் புதிய வகை கொரோனா இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் அவர்களின் மாதிரியும் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 41 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று…

மேலும்...

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து – கேப்டன் வருண்சிங் மரணம்!

குன்னூர் (15 டிச 2021): குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்த கேப்டன் வருண்சிங் சிகிச்சை பலனனின்றி காலமானதாக விமானப்படை தெரிவித்துள்ளது. கடந்த 8ஆம் தேதி குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். அதில் 80% தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட கேப்டன் வருண்சிங்கிற்கு முதலில் குன்னூர் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் உயர் சிகிச்சைக்காக அவர் பெங்களூரு ராணுவ மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை…

மேலும்...