தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் பட்டியலை தயாரிக்க உத்தரவு!

சென்னை (17 நவ 2021): தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் பட்டியலை தயாரிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட தகுதியான நபர்களில், 73 சதவீதம் பேருக்கு, முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் தவணை தடுப்பூசி 35 சதவீதம் நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. தகுதிவாய்ந்த அனைவருக்கும், விரைவில் தடுப்பூசி கிடைத்திடும் வகையில், வாரம்தோறும் ஒரு சிறப்பு தடுப்பூசி முகாமுக்கு பதிலாக, இரண்டு சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்த அரசு உத்தேசித்துள்ளது. மேலும், இதுவரை…

மேலும்...

சென்னையில் மீண்டும் பின்னி எடுக்கும் கனமழை!

சென்னை (16 நவ 2021): சென்னையில் செவ்வாயன்று இரவு மீண்டும் கனமழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களாக பெய்த மழையால் சென்னை பெருவெள்ளத்தில் தத்தளித்தது. தற்போது ஓரளவுக்கு மழையிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பி வந்த நிலையில் சென்னையில் சென்னையில் செவ்வாயன்று இரவு மீண்டும் மழை பெய்து வருகிறது. மீண்டும் மழை பெய்து வருவதால் சென்னை மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

மேலும்...

பல தலைமுறைகளைக் கண்ட 132 வயது பாட்டி மரணம்!

தொண்டி(14 நவ 2021): நூற்றாண்டு கடந்து நலமுடன் வாழ்ந்த முதாட் தனது 132-வது வயதில் மரணத்தை சந்தித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள கொடிபங்கு பஞ்சாயத்துக்குட்பட்ட வேலாங்குடி கிராமத்தில்தான் சந்தனம்மாள் வாழ்ந்து வந்தார். கடந்த 18.5.1889-ம் ஆண்டு பிறந்த சந்தனம்மாளின் கணவர் பெயர் ஆரோக்கியம் என்ற வேளாணி. இந்த தம்பதிகளுக்கு 10 குழந்தைகள்.அதில் தற்போது பிரான்சிஸ், சேசுராஜ், அருளானந்த் ஆகிய 3 மகன்களும், தேவநேசம், பாத்திமாமேரி, பாக்கியம்மேரி ஆகிய 3 மகள்களும் உள்ளனர். 1982-ம் ஆண்டு…

மேலும்...

மழை வெள்ளம் – தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் – ஸ்டாலின்!

சென்னை (14 நவ 2022):: மழை வெள்ளதிற்கு காரணமான எதிர் கட்சிகளின் ஊழல்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தனது சொந்த தொகுதியான சென்னை கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில், மழை வெள்ள பாதிப்பை பார்வையிட நாளை(நவ.,15) அங்கு செல்கிறேன். மழை வெள்ள பாதிப்பு குறித்து அறிக்கை தயார் செய்து, அதனை பிரதமருக்கு…

மேலும்...

கார் விபத்தில் முன்னாள் அழகி உட்பட மூவர் பலி?

திருவனந்தபுரம் (13 நவ 2021): கேரள மாநிலத்தில் ஏற்பட்ட கார் விபத்தில் முன்னாள் கேரள அழகி அன்சி கபீர் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டு திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து டிரைவர் அப்துல் ரஹ்மான் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், விருந்து முடிந்ததும்அன்சி கபீர் சென்ற காரை வேறொரு கார் பிந்தொடர்ந்ததாகவும் இதில் வேகம் அதிகரித்து விபத்து ஏற்பட்டிருக்கக் கூடும் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர் விபத்து தொடர்பான சில…

மேலும்...

வங்கக்கடலில் மீண்டும் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு நிலை!

சென்னை (13 நவ 2021): வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் அடுத்த 12 நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது. வங்கக்கடல் பகுதியில் கடந்த 9-ந்தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, சென்னை அருகே நேற்று முன்தினம் மாலை கரையை கடந்து வலுவிழந்துவிட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் சென்னை உள்பட சில இடங்களில் கன மழை பெய்தது. இந்நிலையில் வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று…

மேலும்...

டெல்டா மாவட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று விசிட்!

தஞ்சாவூர் (13 நவ 2021): டெல்டா மாவட்டங்களில் மழை பாதிப்புகளை, முதல்வர் ஸ்டாலின் இன்று பார்வையிடுகிறார். முதல்வர் ஸ்டாலின், சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று, ஐந்து நாட்களாக ஆய்வு செய்தார்; குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை விரைந்து வெளியேற்ற உத்தரவிட்டார்.ஆறாவது நாளான நேற்று, சென்னை தேனாம்பேட்டையில் தொற்று நோய் பரவாமல் தடுக்க, மருத்துவ முகாம்களை துவக்கி வைத்தார். பின், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டார். வண்டலுார் தாலுகாவில் வசிக்கும் இருளர், பழங்குடியினர்…

மேலும்...

சிங்கப்பெண்ணே – ஹேட்ஸ் ஆஃப் பெண் போலீஸ் ராஜேஸ்வரி!

சென்னை (11 நவ 2021): உயிருக்குப் போராடியவரை தன் தோளில் சுமந்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்த பெண் போலீஸ் ராஜேஸ்வரிக்கு பாராட்டுக்கள் குவிகின்றன. சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறையில் பணிபுரிந்த உதயா, கனமழை காரணமாக கல்லறையிலேயே தங்கி இருந்தார். மழையில் நனைந்ததால், உடல்நிலை மோசமடைந்து மயங்கினார். இதை பார்த்த அப்பகுதி மக்கள், அப்பகுதி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து அங்கு வந்த டி.பி. சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி அவரை, தனது தோளில் தூக்கிக் கொண்டு வந்து…

மேலும்...

தமிழகத்தில் கனமழைக்கு 14 பேர் பலி!

சென்னை (11 நவ 2021): தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 14 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், தமிழகத்தில் பெய்த மழை காரணமாக தற்போது வரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். 1,45,000 ஏக்கர் நிலங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. 187 கால்நடைகள் இறந்துள்ளன. 237 வீடுகள், 1,146 குடிசை வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. உயிரிழப்பு மற்றும் சேதத்திற்கு நிவாரணம் வழங்கப்படும். மழை பாதிப்பு தொடர்பாக கணக்கெடுக்கும் நாளை…

மேலும்...

மழை காரணமாக சென்னையில் 4 விமானங்கள் ரத்து

சென்னை (10 நவ 2021):சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இந்நிலையில், சென்னையில் இருந்து கிளம்பும் மற்றும் சென்னைக்கு வரும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மதுரை, திருச்சி, மும்பை, ஷார்ஜா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும்...