மதுரையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து!

மதுரை (28 ஆக 2021): மதுரையில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது. மதுரை நத்தம் சாலையில் சாலையில் புதிய பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலம் திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் இந்த விபத்தில் இரண்டு கட்டுமான பணியாளர்க்கிறாள் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இருப்பினும், விபத்தின் இடுபாடுகலில் இருவரை தவிர வேறு யாரேனும் சிக்கியுள்ளனரா என்பது குறித்து…

மேலும்...

சட்டசபையில் தன்னைதானே நொந்துகொண்ட ஓ.பி.எஸ்!

சென்னை (28 ஆக 2021): சட்டசபையில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தன்னை தானே நொந்து கொண்டார். ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது திமுக அரசு. இந்த தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பி.எஸ்., வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவதற்கு முன்பு மத்திய அரசிடம் தமிழக அரசு விவாதித்ததா? என்ற கேள்வியை எழுப்பினார். அப்போது எழுந்த…

மேலும்...

ஜவாஹிருல்லா, வேல்முருகன் கோரிக்கைகள் ஏற்பு – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை (28 ஆக 2021): எம்.எல்.ஏக்கள் ஜவாஹிருல்லா, வேல்முருகன் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடியவர்கள் மீதான அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படுகிறது. என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் இன்று அறிவித்தார். தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று (28/08/2021), மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான தனி தீர்மானத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டுவந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேறிய நிலையில், காங்கிரஸ்,…

மேலும்...

அதெல்லாம் வேண்டாம் – எம்.எல்.ஏக்களுக்கு ஸ்டாலின் கோரிக்கை!

சென்னை (27 ஆக 2021): புகழ்ந்து பேசுவதை தவிற்க வேண்டி முதல்வர் ஸ்டாலின் எம்.எல்.ஏக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார். தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று தமிழக சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதம் நடைபெறுகிறது. இந்நிலையில் சட்டசபையில் திமுக எம்எல்ஏக்கள் தங்கள் உரையை ஆரம்பிக்கும் முன்பு அண்ணா, பெரியார், கலைஞர் கருணாநிதி, ஸ்டாலின் என வரிசையாக பாராட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இந்த…

மேலும்...

அனைவரையும் சிலிர்க்க வைத்த மனித நேய மக்கள் கட்சி எம்.எல்.ஏவின் கோரிக்கை!

சென்னை (27 ஆக 2021): பள்ளிக்குழந்தைகள் பாதுகாப்பு குறித்து நேற்று பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கையில் மனித நேய மக்கள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் அப்துல் சமது வைத்த கோரிக்கை அனவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த தமிழக அரசு பல காலமாக மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல இலவச திட்டங்களை வகுத்து செயல்படுத்தியும் வருகின்றன. இந்நிலையில் மனித நேய மக்கள் கட்சி மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் வைத்த கோரிக்கை அதிக முக்கியத்துவம் பெறுகிறது. அவர்…

மேலும்...

பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த பாஜக தலைவர் கைது!

சென்னை (26 ஆக 2021): சென்னையில் தாய்க்கும் மக்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்பட்டு வந்த பாஜகவை சேர்ந்தவரை ஆந்திர மாநிலத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை எருக்கஞ்சேரி பகுதியில் வசித்து வந்தவர் பார்த்தசாரதி(55). பா.ஜ.க.வை சேர்ந்த இவர் பெரம்பூர் கிழக்குபகுதி வழக்கறிஞர் பிரிவு தலைவராக இருந்து வருகிறார். இவரது எதிர் வீட்டில் வசிக்கும் பெண் ஒருவர், கடந்த 2018ஆம் ஆண்டு தன்னிடம் பார்த்தசாரதி தவறாக நடந்து கொண்டதாக சித்ரா கொடுங்கையூர் போலீசில் புகார்…

மேலும்...

நடிகை ஐஸ்வர்யா ராயின் ரகசிய புகைப்படம் வெளியானதால் பரபரப்பு!

சென்னை (24 ஆக 2021): பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ஐஸ்வர்யா ராய் கெட்டப் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தற்போது மத்திய பிரதேச மாநிலம் ஒர்ச்சாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் , ஐஸ்வர்யா ராய் பச்சனின் கெட்டப் புகைப்படம் ஆன்லைனில் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்பு அறிவித்தபடி, பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் – நந்தினி மற்றும் மந்தாகினி தேவி.என்கிற வேடங்களில் நடிக்கிறார்….

மேலும்...

சென்னையில் நில நடுக்கம்!

சென்னை (24 ஆக 2021): வங்கக்கடலில் ஏற்பட்ட நில நடுக்கம் சென்னையிலும் உணரப்பட்டுள்ளது. சென்னைக்கு கிழக்கே வங்கக் கடலில் 5.1 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் காக்கிநாடாவில் இருந்து 296 கி.மீட்டர் கிழக்கு திசையில் வங்கக் கடலில் 10 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பதாகவும் தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் சென்னை அடையாறு, திருவான்மியூர், பெசண்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும்...

ஆபாச வீடியோவில் பாஜக தலைவர் கே.டி.ராகவன் – அதிர்ச்சியில் தமிழக பாஜக!

சென்னை (24 ஆக 2021): பாஜக தலைவர் கே.டி.ராகவனின் ஆபாச வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியுள்ள நிலையில் கே.டி.ராகவன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஒரு யுடூபர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கே.டி ராகவன் பூஜை அறையில் இருந்தவாறு பெண் ஒருவருடன் வீடியோ காலில் பேசியவாறு காம சேஷ்டையில் ஈடுபவதாக அமைந்துள்ளது. இந்த விடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளது. இதற்கிடையே அந்த வீடியோவில் இருப்பது தான் அல்ல என்று கூறியுள்ள ராகவன், பாஜக தலைவர்…

மேலும்...

மாநிலங்களவைக்கு திமுக சார்பில் எம்.எம் அப்துல்லா போட்டி – ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை (22 ஆக 2021): மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளராக எம்.எம் அப்துல்லா போட்டியிடுவார் என முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் மாநிலங்களவை உறுப்பினரான ஏ. முகமதுஜான் கடந்த மார்ச் மாதம் காலமானதை அடுத்து, காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்தல், செப்டம்பர் 13-ஆம் தேதி (திங்கட்கிழமை), காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. அன்று மாலை 5 மணிக்கு…

மேலும்...