சென்னையில் நில நடுக்கம்!

Share this News:

சென்னை (24 ஆக 2021): வங்கக்கடலில் ஏற்பட்ட நில நடுக்கம் சென்னையிலும் உணரப்பட்டுள்ளது.

சென்னைக்கு கிழக்கே வங்கக் கடலில் 5.1 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் காக்கிநாடாவில் இருந்து 296 கி.மீட்டர் கிழக்கு திசையில் வங்கக் கடலில் 10 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பதாகவும் தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் சென்னை அடையாறு, திருவான்மியூர், பெசண்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.


Share this News:

Leave a Reply