தமிழகத்தில் இரு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!

சென்னை (08 ஜன 2023): தமிழகத்தில் 2 நாட்களுக்கு ஓரு சில மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக (8.01.2023, 9.01.2023) இன்று மற்றும் நாளை தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான…

மேலும்...

துபாய் ஹோட்டலில் நடந்தது என்ன? – பெண்களுக்கு எதிரான அண்ணாமலை – விளாசும் காயத்ரி ரகுராம்!

சென்னை (04 ஜன 2023): தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான பாலியல் சர்ச்சை புகார்கள் எழுந்துள்ள நிலையில், நடிகையும் பாஜக உறுப்பினருமான காயத்ரி ரகுராம் பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்தார். காயத்ரி ரகுராம், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக கூறி 6 மாதத்துக்கு சஸ்பெண்டு செய்யப்படுவதாக தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டார். அன்றுமுதல் தமிழக பாஜக பொறுப்புகளிலிருந்து நீக்கம் செய்யப்பட்டிருந்தார் காயத்ரி ரகுராம். பாஜக-வில் இருந்து விலகிய நிலையில் தனியார்…

மேலும்...

ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு டோக்கன் இன்று முதல் விநியோகம்!

சென்னை (03 ஜன 2023): ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு டோக்கன் இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகை 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு பொங்கலுக்கான பரிசு தொகுப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருக்கிறார். அதன்படி, அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக்கரும்பு ஒன்று மற்றும் ஆயிரம் ரூபாய் ஆகியவை வழங்கப்பட உள்ளன. இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வருகிற 9-ந் தேதியில் இருந்து வழங்கப்பட…

மேலும்...

பாஜகவிலிருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவிப்பு!

சென்னை (03 ஜன 2023): அண்ணாமலை தலைமையிலான தமிழ்நாடு பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு சம உரிமை, மரியாதை ஆகியவற்றை வழங்காத காரணத்தினால் கட்சியிலிருந்து விலகுவதாக நடிகை காயத்ரி ரகுராம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக காயத்ரி ரகுராம் தனது ட்விட்டரில் பதிவிட்டு இருப்பதாவது: “பெண்களுக்கு மரியாதை, சம உரிமை இல்லாத தமிழ்நாடு பாஜகவில் இருந்து வெளியேறும் முடிவை கனத்தை இதயத்துடன் எடுக்கிறேன். அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பாஜகவின் உண்மைத் தொண்டர்கள் குறித்து…

மேலும்...

செரிமான பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா? சமையலறையில் தீர்வுகள் உள்ளன

உங்கள் செரிமான அமைப்பு ஆரோக்கியமாக இருக்க, உங்கள் வளர்சிதை மாற்றம் சரியாகவும் உங்கள் குடல் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். ஒவ்வாமை, தோல் பிரச்சினைகள் மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு செரிமான பிரச்சனைகள் மூல காரணமாக இருக்கலாம். உங்கள் செரிமான அமைப்பின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் நல்ல மற்றும் கெட்ட குடல் பாக்டீரியாக்களின் சமநிலையைப் பொறுத்தது. மன அழுத்தம் மற்றும் மோசமான உணவு ஆகியவை குடல் பாக்டீரியாவின் சமநிலையை பாதிக்கும் இரண்டு காரணிகள். உங்களுக்கு மலச்சிக்கல், அமில ரிஃப்ளக்ஸ்,…

மேலும்...

சீனாவில் தமிழக மருத்துவ மாணவர் அப்துல் சேக் மரணம்!

பீஜிங் (02 ஜன 2023): சீனாவில் கடந்த 5 ஆண்டுகளாக மருத்துவம் படித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த 22 வயது மாணவர் அப்துல் சேக் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பொருளாதாரத்தில் நலிவடைந்த அவரது குடும்பத்தினர், மாணவரின் உடலைக் கொண்டுவர வெளியுறவு அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அப்துல் ஷேக், தனது மருத்துவ படிப்பை முடித்து சீனாவில் பயிற்சி மேற்கொண்டு வந்தார். சமீபத்தில் இந்தியா திரும்பிய அவர், டிசம்பர் 11ம் தேதி மீண்டும் சீனாவுக்கு திரும்பினார்….

மேலும்...

முன்னாள் திமுக எம்.பி மஸ்தான் மரணத்தில் திடீர் திருப்பம் – 5 பேர் கைது!

சென்னை (30 டிச 2022): தி.மு.க. முன்னாள் எம்.பி.மஸ்தான் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தம்பி மருமகன் உள்பட 5 பேரிடம் ரகசிய இடத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தி.மு.க. சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு மாநில செயலாளர், தமிழக சிறுபான்மை வாரிய துணைத்தலைவராக இருந்தவர் முன்னாள் எம்.பி. டாக்டர் மஸ்தான் (வயது 66). இவரது மகன் திருமண நிச்சயதார்த்தம் கிண்டி ஐ.டி.சி. சோழா ஓட்டலில் நடக்க இருந்தது. இதையொட்டி அனைத்து ஏற்பாடுகளையும் அவர் செய்து வந்தார். முக்கிய…

மேலும்...

கூடுதலாக ஒரு பொங்கல் பரிசு – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை (28 டிச 2022): பொங்கல் பரிசாக கரும்பும் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாயுடன், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என்று கடந்த 22-ந்தேதி அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது குறித்து பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், பொங்கல் பண்டிகைக்கு கரும்பை அரசு கொள்முதல் செய்யும் என்று நம்பி பயிரிட்டதாக விவசாயிகள் தெரிவித்து வந்தனர். சென்னை…

மேலும்...

அரசு மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு!

சென்னை (26 டிச 2022): தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் சுகாதாரத் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஆறு மாதங்களுக்கு தேவையான கொரோனா பரிசோதனை கருவிகளை வாங்குமாறும், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவசரகால பயன்பாட்டிற்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை தயாராக வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெண்டிலேட்டர் போன்ற தீவிர சிகிச்சைக்கான ஏற்பாடுகளையும்…

மேலும்...

குர்ஆன் குறித்து பரங்கிப்பேட்டை பத்தாம் வகுப்பு மாணவி எழுதிய ஆங்கில நூல் வெளியீடு!

பரங்கிப்பேட்டை (26 டிச 2022): பரங்கிப்பேட்டை மேல்நிலைப்பள்ளி மாணவி செல்வி அமீரா (த/பெ) பாரூக் எழுதிய Scientific facts in Islam என்னும் ஆங்கில நூல் கடந்த 24.12.2022 சனிக்கிழமை அன்று புதுச்சேரி, லாஸ்பெட்டில் உள்ள விவேகானந்தா பள்ளியில் புதுவை குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக் கழகம் சார்பில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது. பரங்கிப்பேட்டை மாணவி செல்வி. அமீரா ஃபாருக் என்பவர் 10ஆம் வகுப்பு படிக்குபோது ஆங்கிலத்தில் எழுதிய புத்தகம் கொரோனோ காரணமாக இரண்டு வருடங்கள் பதிப்பிக்க…

மேலும்...