சென்னை (26 டிச 2022): தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் சுகாதாரத் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி ஆறு மாதங்களுக்கு தேவையான கொரோனா பரிசோதனை கருவிகளை வாங்குமாறும், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.
மேலும் அவசரகால பயன்பாட்டிற்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை தயாராக வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெண்டிலேட்டர் போன்ற தீவிர சிகிச்சைக்கான ஏற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருக்குமாறும், கொரோனா பரிசோதனை சாதனங்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.