எனிமி திரைப்படம் எப்படி? – சினிமா விமர்சனம்!

Share this News:

ரியல் நண்பர்களான ஆர்யாவும் விஷாலும் இரு வேறு துருவங்களாக தோன்றி தீபாவளிக்கு வெளியாகியுள்ள படம் எனிமி.

தம்பி ராமையாவின் மகன் விஷால், பிரகாஷ் ராஜின் மகன் ஆர்யா இருவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள். இருவரின் வீடுகளும் அருகருகே உள்ளதால் இவர்களின் நட்பு மிகவும் நெருக்கமாக இருக்கிறது. பிரகாஷ் ராஜ் போலீஸ் அதிகாரியாக இருப்பதால் இருவருக்கும் துப்பாக்கி சுடுவதில் இருந்து அணைத்து விதமான பயிற்சியையும் கற்று கொடுக்கிறார்.

திடீரென பிரகாஷ் ராஜ் கொலை செய்யப்படுவதால், நண்பர்கள் இருவரும் பிரிகிறார்கள். அதன்பின் வளர்ந்து பெரிய ஆளாக இருக்கும் விஷால், சிங்கப்பூரில் செட்டிலாகிவிடுகிறார். இந்நிலையில், மினிஸ்டர் ஒருவரை கொலை செய்யும் முயற்சி நடக்கிறது. இதை விஷால் தடுக்கிறார்.

கொலை முயற்சியில் ஈடுபட்டது ஆர்யா என்று விஷாலுக்கு தெரிய வருகிறது. இறுதியில் ஆர்யா கொலை முயற்சியில் ஈடுபட காரணம் என்ன? நண்பர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா..? பிரகாஷ் ராஜின் ஏன் கொலை செய்யப்பட்டார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் விஷால், ஆர்யா இருவரும் அவர்களுக்கே உரிய பாணியில் போட்டி போட்டு நடித்து நடித்துள்ளார்கள். ஆக்‌ஷன் காட்சிகளில் இருவரும் மிரட்டியுள்ளார்கள். நாயகியாக வரும் மிர்ணாளினி ரவி கொடுத்த வேலையை அழகாக செய்திருக்கிறார்.

மம்தா மோகன்தாஸ் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளார். பிரகாஷ் ராஜ், தம்பி ராமையா ஆகியோர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். கிரைம் திரில்லர் பாணியில் படத்தை இயக்கி இருக்கிறார் ஆனந்த் சங்கர்.

கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். ஆர்யா, விஷால் இருவருக்கும் சமமான கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார். திரைக்கதை சுவாரஸ்யமாக செல்வது படத்திற்கு பெரிய பலம்.

தமன் இசையில் பாடல்கள் மற்றும் சாம்.சி.எஸ்ஸின் பின்னணி இசை படத்தை தாங்கி நிற்கிறது. ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.

சுமார் ரகம்


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *