காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் இந்துத்துவாவின் சமீபத்திய முஸ்லிம் எதிர்ப்பு ஆயுதம்!

Share this News:

காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற திரைப்படம், இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான மற்றும் காஷ்மீர் எதிர்ப்பு உணர்வுகளைத் தூண்டுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு பிரச்சார கருவியாக மாறியுள்ளது, இது சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பின் தற்போதைய சூழலைக் காட்டியுள்ளது.

காஷ்மீர் ஃபைல்ஸ் 1990-ல் கொல்லப்பட்டு உயிரிழந்த காஷ்மீரி பண்டிட்களின் நிலை குறித்து பேசுகிறது. வலதுசாரியாக அறியப்பட்ட விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய இந்தத் திரைப்படம் மார்ச் 11ஆம் தேதி வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இத்திரைப்படம் மூலம் வலதுசாரி ஆதரவாளர்களிடமிருந்து மிகத் தெளிவான எதிர்வினைகள் இணையத்தில் வெளிவரத் தொடங்கியுள்ளன. இதில் வழக்கமான ‘ஜெய் ஸ்ரீ ராம்’ கோஷங்கள் மற்றும் பாஜக அல்லாத அரசியல் கட்சிகளைத் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் இந்த திரைப்படம் பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி, சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் கே சந்திரசேகர் ராவ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராகவும் எதிர்ப்பைத் தூண்டியுள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தைப் பார்த்துவிட்டு திரையரங்கை விட்டு வரும் இந்து பார்வையாளர் ஒருவர் ஊடகங்களிடம் பேசுகையில், ‘முஸ்லிம்களிடம் ஜாக்கிரதை’ என்று மக்களை எச்சரிக்கிறார்.

மேலும் நெற்றியில் திலகம் வைத்த ஒருவர் தியேட்டரை விட்டு வெளியேறும்போது கூறுகையில் “எனது இந்து சகோதரர்களை எச்சரிக்க விரும்புகிறேன், எச்சரிக்கையாக இருக்கவும், அவர்களிடமிருந்து உங்கள் தூரத்தை பராமரிக்கவும். அவர்களைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள், அவர்கள் எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம், ”என்று கூறுகிறார்.

ஆக காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் திட்டமிட்டு முஸ்லிம்களைக் குறிவைத்து தாக்கும் திரைப்படமாக அமைந்துள்ளது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *