நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பல தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த நடிகை விஜயலட்சுமி தற்போது திடீரென தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளர்.தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரபல மலையாள டைரக்டர் சித்தீக் இயக்கத்தில் ஹிட்டான ஃபிரண்ட்ஸ் படத்தில் நடிகர் விஜய்க்கு தங்கையாகவும், சூர்யாவுக்கு ஜோடியாகவும் நடித்தவர்தான் இந்த விஜயலட்சுமி. தற்போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளராக இருக்கும் சீமான் மீது, தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டார் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு குற்றம்சாட்டியிருந்தார். அதன் பின்னர் கடந்த சில மாதங்களாக சீமான் மீது ஃபேஸ்புக் பக்க நேரலையில் வந்து மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.
இந்நிலையில் இன்றும் திடீரென தன்னுடைய ஃபேஸ்புக்கில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். தனது தாய் மற்றும் தமக்கைக்காக உயிர் வாழ நினைத்திருந்தாலும் தற்போது அந்த எண்ணத்தைக் கைவிட்டு விட்டதாகவும் கூறியிருக்கின்றார். மேலும் அதற்கு காரணம், ஹரி நாடார் போன்றோர், தனது சாதியைக்கூறி இழிவாகப் பேசியும். தனது நாக்கை அறுத்துவிடுவேன் என்று மிரட்டுவதாகவும் கூறியிருக்கின்றார். மேலும், தான் ஏற்கனவே குற்றஞ்சாட்டி வரும் சீமான் மீதும், ஹரி நாடார் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். தற்கொலைக்கு முயன்ற அவர் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.