பிரபல தொலைக்காட்சி நடிகை தூக்கில் தொங்கிய நிலையில் மரணம்!

Share this News:

மும்பை (25 டிச 2022): நடிகை துனிஷா ஷர்மா மும்பையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

20 வயதான நடிகை ஒரு தொலைக்காட்சி சீரியலின் செட்டில் தூக்கிட்டபடி இருந்தார். உடன் அவர் அருகில் உள்ள உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்,

ஆனால் காப்பாற்ற முடியவில்லை. சீரியல் செட்டின் மேக்கப் அறையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

முதல் கட்ட விசாரனையில் தற்கொலை என போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவரது சக நடிகரான ஷீசன் முகமது கான் தற்கொலைக்குத் தூண்டியதாக குற்றம் சட்டப்பட்டுள்ளார்.

குழந்தை நடிகையாக அறிமுகமான துனிஷா, பாரத் கா வீர் புத்ரா மஹாராணா பிரதாப் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடத்தினார்.

சக்ரவர்தின் அசோகா சாம்ராட், கப்பர் பூஞ்ச்வாலா, ஷேர்-இ-பஞ்சாப்: மகாராஜா ரஞ்சித் சிங், இன்டர்நெட்வாலா லவ் மற்றும் இஷ்க் சுபான் அல்லா போன்ற நிகழ்ச்சிகளிலும் துனிஷா நடித்துள்ளார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *