பற்றி எரிந்த டெல்லியில் முஸ்லிம்களை பற்றிப் பிடித்த மொஹிந்தர் சிங்!

Share this News:

புதுடெல்லி (01 மார்ச் 2020): டெல்லி இனப்படுகொலை சம்பவத்தில் 70 க்கும் மேற்பட்ட முஸ்லிம்களை கொலைக் கும்பலிடமிருந்து காப்பாற்றியுள்ளனர் இரண்டு சீக்கியர்கள்.

தலைநகர் டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு அமைதி வழி போராட்டத்தில் இனப்படுகொலையாளர்கள் புகுந்து போராட்டத்தை வன்முறையாக மாற்றி 42 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.

குறிப்பாக வடகிழக்கு டெல்லியில் இந்துக்கள் அதிகம் வசிக்கும் கோகுல்புரி பகுதி அதிகமாக பாதிக்கப்பட்டட்ஜி/ அங்கு வசித்து வந்த 70-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் வன்முறையாளர்களுக்குப் பயந்து ஆங்காங்கே பதுங்கியிருந்தனர். இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் கர்தம்புரி பகுதிக்குச் சென்றால் பாதுகாப்பாக இருக்கலாம் என முடிவு செய்துள்ளனர். ஆனால், இங்கிருந்து கும்பலாக வெளியில் செல்வது ஆபத்து என உணர்ந்த அந்த மக்கள் ஆங்காங்கே பதுங்கியிருந்தனர். கோகுல்புரி பகுதியில் இருந்த அந்த மக்களை சீக்கிய மதத்தைச் சேர்ந்த மொஹிந்தர் சிங் மற்றும் அவரின் மகன் இந்தர்ஜித் சிங் பத்திரமாக கொண்டு சேர்த்துள்ளனர். இருவரும் தங்களது இருசக்கர வாகனத்தில் அவர்களை அழைத்துச் சென்று விட்டுள்ளனர்.

என்னதான் மதவெறி தலவிரித்தாடினாலும், ஒருபுறம் மனிதநேயமும் அதற்கு மேலு போட்டியிட்டுக் கொண்டு முன்னேறி வருவதற்கு இதுபோன்ற சம்பவங்கள் உதாரணம்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *