ஹோலி பண்டிகையின்போது முஸ்லிம் பெண் மீது தாக்குதல் – உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கண்டனம்!

Share this News:

புதுடெல்லி (13 மார்ச் 2023): ஹோலி பண்டிகையன்று முஸ்லிம் பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளுக்கு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஹோலி கொண்டாட்டத்தின் போது, ​​நாட்டின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம் பெண்கள் தாக்கப்படும் பல காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சில நாட்களுக்கு முன், ரிக்ஷாவில் பயணித்த ஹிஜாப் அணிந்த பெண் ஒருவரை குழந்தைகள் குழு ஒன்று தாக்கும் காட்சிகள் வெளியாகின. பெண்களின் எதிர்ப்பையும் மீறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், டெல்லியின் பஹத்கஞ்சில் ஜப்பானிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் மகளிர் ஆணையத்தின் தலையீட்டிற்குப் பிறகு காவல்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் சிறுவன் உட்பட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். அனைவரும் பஹத்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

இந்நிலையில் சாலையில் நடந்து செல்லும் முஸ்லிம் பெண் மீது சிறுவர்கள் சிலர் தண்ணீர் பலூன்களை வீசுகின்றனர். இந்த சம்பவத்தின் பின்னணியில் சிறார்களே இருப்பது வீடியோவில் தெளிவாக தெரிகிறது. ஆனால் அதனை பார்க்கும் பெரியவர்கள் யாரும் அவர்களைத் தடுக்க முயலுவதில்லை. இதனை கடுமையாக கண்டித்துள்ள நீதிபதி கட்ஜு, இது அனைவரையும் அவமதிக்கும் செயல். ஹோலியை இப்படித்தான் கொண்டாட வேண்டுமா? இதுபோன்ற சம்பவங்கள் நம் அனைவருக்கும் அவமானம்.’ என தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *